விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சன்ம சன்மாந்தரம் காத்து*  அடியார்களைக் கொண்டுபோய்,* 
    தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்*  கொள்ளும் அப்பனை,* 
    தொன்மை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
    நன்மை பெறுத்து எம்மை*  நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சன்மம் சன்மாந்தாந்தரம் காத்து - மாறி மாறிப்பல பிறப்பும் பிறவாதபடி காத்து
அடியார்களை - அடியவர்களை
கொண்டுபோய் - (நித்ய விபூதியிலே) கொண்டு போய்
தன்னைபெறுத்தி - ஸ்வஸ்ரூப ப்ராப்தியைப் பண்ணிக்கொடுத்து
த்ன தாள் இணைகீழ் - தனது திருவடிகளின் கீழே

விளக்க உரை

அடியவர் திறந்து அவன் செய்தருளும் மஹோபகாரங்களை அநுஸந்தித்து அப்படிகளைப் பிதற்றல்லாரைப் பிதற்றுமவர்கள் திடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகளென்கிறார். அவரவர்கள் செய்துபோந்த கருமங்களுக்குப் பலனாக எத்தனையோ ஜன்மங்கள் நேரவேண்டியிருக்கும்; இருந்தாலும் ஸ்வல்பமான ஆபிமுக்க்யத்தையே கனக்கக்கொண்டு அந்த ஜன்மாந்தரங்கள் விளையாதபடி பரிஹரித்துத் தந்தருள்வன் எம்பெருமான். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்திருப்பனவாதலால் விசேக்ஷித்து அநுபவிக்கத்தக்கவை. தொன்னைபிதற்றவல்லாரை = தொன்மை இயற்கையான குணம் என்றபடி. அதாவது இங்கு ஔதார்யகுணம். முன்னடிகளில் ஔதார்யம் பேசப்பட்டதாதலால் அதுவே யிங்குக் கொள்ளவுரியது; அக்குணத்திலே யீடுபட்டுப் புகழுமவர்களைப் புகழுமவர்கள் பாகவத சேக்ஷத்வபர்யந்தமான பகவத் சேஷத்வஸம்பத்தையுண்டாக்கி நமக்கு அவன் திருவடிகளில் கைங்கரியத்தை எஞ்ஞான்றும் நடத்தக்கடவ பெரியார் என்றதாயிற்று.

English Translation

He comes to devotees' old through life after life. He gives them his nature and takes them unto his feet, those who praise those who praise his eternal glory shall be my trusted masters forever, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்