விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,*  அமரர்கட்கு* 
    அருமை ஒழிய*  அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*
    பெருமை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
    வருமையும் இம்மையும்*  நம்மை அளிக்கும் பிராக்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை - பெருமக்கள் என்னப்படுகின்ற நித்யஸூரிகட்குத் தலைவனும்
அமரர்கட்கு - சாவாமை வேண்டியிருக்கும் தேவர்களுக்கு
அருமை ஒழிய - அருமைப்படாதபடி
அன்று - முன்பொருகாலத்தில்
ஆர் அமுது ஊட்டிய - அம்ருதத்தைப் பூஜிப்பித்தவனுமான

விளக்க உரை

ப்ரயோஜநாந்தர பார்க்குங்கூட அபேக்ஷிதத்தைத் தலைக்கட்டிக் கொடுத்தருளு மெம்பெருமானுடைய ஔதார்யத்திலே தோற்றவர்களான பாகவதர்களுக்குத் தோற்றிருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார். (பெருமக்களுள்ளவர் தம் பெருமானை) பெரியோர்கள் என்று யாவருளரோ அவர்களெல்லார்க்கும் பெரியோன் என்றபடி; “யாங்கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீயென்றால் அஃதுனக்கு வியப்பாமோ?” என்ற பிள்ளைப்பெருமாளையங்கார் பாசுரங்காண்க. “பெருமக்களுள்ளவர்தம் பெருமான்” என்றதற்கு “ப்ரஹ்மேசாநாதி ஸர்வ தேவர்களுக்கும் ஈச்வரன்” என்பது ஆறாயிரப்படி வியாக்கியானம். “நித்யஸூரிகளுக்கு நாதன்” என்று மற்ற வியாக்கியானங்கள். வேறொரு பலனையும் விரும்பாமல் எம்பெருமானையே பரம ப்ரயோஜனமாக விரும்ப வேண்டுவது ஸ்வரூப ப்ராப்தம். அங்ஙனம் தன்னை விரும்பாமல் வேறொரு அற்ப பலனை விரும்பி அது பெறுவதற்காகத் தன்னைவந்து பணிவாருண்டாகில் இவர்கள் நம்மையே பரம ப்யோஜனமாகக் கொள்ளும் உத்தமாதிகாரிகளாக இல்லாவிட்டாலும், வேறொரு பலனை விரும்பினார்களாகிலும், அப்பலனைப் பெறுவதற்கு வேறொரு க்ஷுத்ர தேவதையைத் தேடி ஓடாமல் நம்மிடம் வந்தார்களே; நம்மை உபேயமாகக் கொள்ளாவிடினும் உபாயமாகவாவது கொண்டார்களே’ என்று திருவுள்ளமுவந்து அருமையான காரியங்களைச் செய்து அவர்களது மனோரதத்தை நிறைவேற்றுபவன் எம்பெருமான்- என்பது இந்தச் சரிகையினால் விளங்கும். இப்படிப்பட்ட பெருமையைப் பிதற்றுமவர்கள் யாவர், அவர்களுடைய பெருமையைப் பிதற்றுமவர்கள் இஹலோக பரலோகங்களிரண்டிலும் நம்மை யுஜ்ஜீவிப்பிக்கும் ஸ்வாமிகள் இஹலோகத்திற்பண்ணுமுபகாரமாவது நாட்டாரோடு இயல்வொழித்தல், பரலோகத்திற் பண்ணுமுபகாரமாவது* அடியார்க்கு குழாங்களிலே உடன் கூட்டுவது

English Translation

My Lord came to the old of the celestials. He gave them ambrosia from the Ocean of Milk. Those who praise those who praise him, are my masters through this and all my lives, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்