விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உடை ஆர்ந்த ஆடையன்*  கண்டிகையன் உடை நாணினன்* 
    புடை ஆர் பொன் நூலினன்*  பொன் முடியன் மற்றும் பல்கலன்,* 
    நடையா உடைத் திருநாரணன்*  தொண்டர் தொண்டர் கண்டீர்,* 
    இடை ஆர் பிறப்பிடைதோறு*  எமக்கு எம் பெருமக்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உடை ஆர்ந்த ஆடையன் - திருவரைக்குத் தகுதியான திருப்பரிவட்டத்தையுடையவனும்
கண்டிகையன் - கண்ட பூஷணத்தையுடையவனும்
உடை நாணினன் - திருப்பரிவட்டத்தின் மேல் சாத்தின திருவரை நாணையுடையவனும்
புடை ஆர் - ஸந்நிவேசமமைந்த
பொன் நூலினன் - பொற்பூணூலை யுடையவனும்

விளக்க உரை

திருவரை பூத்தாற்போலே யிருக்கிற திருப்பீதாம்பரத்தை யணிந்தவனாய், திருக்கழுத்திலே சாத்தும் திவ்யாபரணங்களையுடையனாய், அழகிய அரைநூல் மாலையை யணிந்தவனாய், ஒரு பக்கத்திற்கு வேறொரு ஆபரணம் வேண்டாதபடி தானே போருமாய், காளமேகத்திலே மின்னினாயப்போலே யிருக்கிற யஜ்ஞோப வீதத்தையுடையவனாய், ஆச்ரிதரக்ஷணத்திற்கு முடிகவித்திருப்பவனாய், மற்றம் எண்ணிறந்த திருவாபரணங்களை இயற்கையாகவே அணிந்துள்ளவனான ஸ்ரீமந்நாராயணனுக்கு தாஸாநுதாஸர்களாயிருக்குமவர்கள் பிறவிவேதாறும் எமக்கு அஸாதாரண சேஷிகளாவர்கள் என்றாராயிற்று. “உடையார்ந்த வாடையன்” என்றவிடத்து “தாஸாமாவிசபூத் சௌரி: ஸ்மயமாந முகாம்புஜா; பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத்மந்மதமந்மத:” என்கிற ஸ்ரீபாகவத ச்லோகத்தை நம்பிள்ளை வெகு அழகாக வியாக்கியானித்தருளுகிறார். கண்டிகையான் என்றவிடத்து ஈடு:- “கூறையுடையழக மேலே யெழ வீசிப்போகா நிற்க, நடுவே வழிபறித்துக் கொள்ளும் திருக்கழுத்திலாபரணம் இவரைமடி பிடித்துகொண்டு போயக் கழுத்தளவு ஸௌந்தர்யத்திலே நிறுத்திற்று” என்பதாம். இந்த ஸ்ரீஸூக்தியின் சுவை ரஸிகர்களால் சுவைக்கத்தக்கதத்தனை.

English Translation

My Lord wears a necklace, waist belt and yellow robes, a splendid golden thread a golden crown and many ornaments. Those who serve the servants of his devotees are my masters through every life, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்