விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரவி வானவர் ஏத்த நின்ற*  பரமனை பரஞ்சோதியை,* 
    குரவை கோத்த குழகனை*  மணி வண்ணனை குடக் கூத்தனை,* 
    அரவம் ஏறி அலை கடல் அமரும்*  துயில்கொண்ட அண்ணலை,* 
    இரவும் நன் பகலும் விடாது*  என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் - தேவர்கள்
பரவி ஏத்த நின்ற - வாயாரத் துதிக்கும்படி அமைந்த
பரனை - பராத்பரனாய்
பரம் சோதியை - மேலான ஒளியுருவனாய்
குரவை கோத்த - (கோபிமார்களோடு) ராஸக்ரீடை செய்த

விளக்க உரை

கீழ்பாசுரத்தில் ப்ரஸ்தாவித்த இராமபிரானிற்காட்டிலும் எளியனாய் வந்து திருவவதாரம்பண்ணியரளின கண்ணபிரானை ஆச்ரயிக்கப்பாருங்களென்கிறார். க்ருஷ்ணவதாரத்திற்கு ஹேதுவாகத் தேவர்கள் பண்ணின தோத்திரத்தைத் திருவுள்ளம்பற்றிப் பரவி வானவரேத்தநின்ற என்றருளிச் செய்கிறார். பூமிதேவிக்கத் தன்மீது ஸஜ்ஜனங்கள் எத்தனை கோடிக்கணக்காக இருந்தாலும் அவர்களைச் சுமப்பது இலவம்பஞ்சைச் சுமப்பதுபோல் வருத்தமற்றிருக்கும்; ஒரு துஷ்டனுண்டாகிலும் இரும்பு மூட்டையைத் தாங்குவது போல் மிக வருத்தமாம்; ஆதலால் த்வாபரயுகத்தில் இப்பூமியின் கண் பிறந்திருந்த கம்ஸன் சிசுபாலன் முதலிய அசுரர்களின் பாரத்தைப் பொறுக்கமாட்டாமல் பூமிப்பிராட்டி கோரூபத்தைத்தரித்து மேருமலையினுச்சியிலுள்ள தேவர்களின் ஸபையையடைந்து, அச்சபை நடுவில் வீற்றிருக்கும் நான்முகனை வணங்கித் தனது துயரத்தை முறையிட்டு இவ்வஸுரர்களைத் தொலைத்துத் தன்னை ஸுகப்படுத்தவேணுமென வேண்டிக்கொள்ள, அதற்கு நான்முகன் சிறிது காலம் யோசித்து ‘இது நம்மாலாகாது, ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனாய் ஸர்வலோக பிதாவாகிய ஸ்ரீமந்நாராயணனுக்கு அறிவித்து அவர் மூலமாக இக்காரியத்தை நிறைவேற்றுவிக்கவேணும்’ எனக்கருதி அந்தப்பூமியையும் மற்றுமுள்ள தேவர்களையுங் கூட்டிக்கொண்டுபோய்ப் பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமனைத் தொழுது துதித்தனர்; பின்பு திருமால் அருளிபுரிந்த சிந்தைகொண்டு அவர்கட்குக் காட்சிதந்து யோகக்ஷேமங்களை விசாரித்து அவர்கள் வந்த வரலாற்றை யுணர்ந்தருளி அவர்கட்கு வாக்கு அளித்தபடியே இந்நிலத்தில் கண்ணபிரானாய் வந்து திருவவதரித்தனனென்றுணர்க.

English Translation

Set your heart on praising him relentlessly night and day, the gem-hued Lord reclines on a serpent couch in the deep ocean. He is the effulgent Lord worshipped by the celestials, he is the beautiful pot dancer who played Road with the Gopis!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்