விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செய்ய தாமரைக் கண்ணன் ஆய்*  உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,* 
    வையம் வானம் மனிசர் தெய்வம்*  மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
    செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்*  வெளிப் பட்டு இவை படைத்தான்*  பின்னும் 
    மொய்கொள் சோதியோடு ஆயினான்*  ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செய்யதாமரை கண்ணன் ஆய் உலகு ஏழும் - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையனாய்
உலகு ஏழும் - ஸகலலோகங்களையும்
உண்ட அவன் - (ஒரு சமயத்தில்) திருவயிற்றிலே வைத்து நோக்கினவனாய்
வையம் - பூமியும்
வானம் - விண்ணுலகங்களும்

விளக்க உரை

புண்டரீகாக்ஷத்வம் ஜகத் காரணத்வம் முதலிய குணங்களையுடைய எம்பெருமானே ஆச்ரயணீய னென்கிறார். இரண்டாம் பாட்டில் “பங்கயத்தடங் கண்ணனைப் பரவுமினோ” என்று வினைமுற்று உள்ளது; அதுவே இப்பாட்டிலும் மாநஸமாக அநுஸந்தேயமாய் இரண்டு பாட்டுஞ் சேர்ந்து ஏகக்ரியாந்வயி என்பாருமுண்டு; அன்றியே, இப்பாட்டில் வினைமுற்று இல்லையென்று அதனை மேற்பாட்டிலிருந்து வருவித்துக்கொள்ளவேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை; பகவத் குணங்களில் ஈடுபட்டுப் பேசும்போது வினைமுற்று இல்லாத விடங்களில் ஈடுபாடாகவே கொள்ளுதல் வேண்டும் என்பாருமுண்டு. இந்த ஈடுபாட்டிலிருந்து பரோபதேசம் அர்த்தாத் ஸித்தமாகும். இத்திருவாய்மொழி எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை நிரூபணம் செய்யப் பிறந்ததாயினும் முதலில் பரத்வமே பேசப்பட்டு வருகின்றது; பரத்வமுடையவனுடைய ஸௌலப்யமே பாராட்ட வுரியதாகு மென்பதுபற்றி. ஈரந்தோக்ய உபநிஷத்தில் (* தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ*) என்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு “செய்யதாமரைக் கண்ணனாய்” என்கிறார். மேலெடுத்துக்காட்டிய உபநிஷத் வாக்யத்தின் கீரிய பொருளை வேதார்த்த ஸங்க்ரஹத்தில் எம்பெருமானார் அருளிச்செய்தார். கப்யாஸம் புண்டரீகம் என்பதற்கு மூன்று வகையாகப் பொருள்கொள்வது ஆசிரியர் உவந்ததாம்.

English Translation

Hear ye all about the Lord of lotus eyes, the sallower of the Universe! He became the effulgent knowledge, through which he made the Earth the sky, men, gods, and all else. Then he also became the effulgent Lord-of-three-faces.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்