விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றம் ஏந்திக்*  குளிர் மழை காத்தவன்,* 
    அன்று ஞாலம்*  அளந்த பிரான்,*  பரன்
    சென்று சேர்*  திருவேங்கட மா மலை,* 
    ஒன்றுமே தொழ*  நம் வினை ஓயுமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குன்றம் ஏந்தி - (கோவர்த்தன) மலையைக் குடையாகத் தாங்கிநின்று
குளிர் மழை - குளிர்ந்தபெருமழையை
காத்தவன் - தடுத்தவனும்
அன்று - முன்பொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் - உலகங்களையளந்த பிரபுவுமாகிய

விளக்க உரை

எம்பெருமானுக்கும் பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்; அது நமக்கு ஒரு பலனையளிக்க வேணுமென்பதில்லை; ஒரு பலனையும் தாரா தொழியினும் அதுவே நமக்கு ப்ராப்பயமாகக்கடவது- என்கிறார். விபவாவதாரத்தோடு அர்ச்சாவதாரத்தோடு வாசியற எஞ்ஞான்றும் மலையே ரக்ஷகமென்ற சாடூக்தியாக இங்கு அருளிச்செய்வர்கள். அன்று ஞாலமளந்தபிரான் - ஒரு ஊர்க்கு உதவினமை கீழே சொல்லிற்று; உலகுக்கெல்லாம் உதவினமை இதனால் சொல்லுகிறது. தாவியன்ணுலகமெல்லாம் தலைவிளாக்கொண்ட த்ரிவக்ரமாவதார சரிதம் ப்ரஸித்தம். இப்படிப்பட்ட பரன் சென்ற சேர் திருவேங்கடமாமலை யொன்றமே தொழ நம் வினை ஓயும். உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானம் வேண்டா, திருமலையாழ்வாரே போதும் என்கை.

English Translation

The wonder-Lord who stopped the rains, and measured the Earth has come to stay in Venkatam. Worshipping him destroys our Karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்