விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுமந்து மாமலர்*  நீர் சுடர் தூபம் கொண்டு,* 
    அமர்ந்து வானவர்*  வானவர் கோனொடும்,* 
    நமன்று எழும்*  திருவேங்கடம் நங்கட்குச்,* 
    சமன் கொள் வீடு தரும்*  தடங் குன்றமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுமந்துகொண்டு - ஏந்திக்கொண்டு
வானவர் - தேவர்கள்
வானவர் கோ னொடும் - தங்கள் தலைவனோடுகூட
அமர்ந்து நமன்று - அநந்யப்ரயோஜநராய் வணங்கி
எழும் - உஜ்ஜீவிக்குமிடமான
திருவேங்கடம் - திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே

விளக்க உரை

நமக்கு அபேக்ஷிதமான அடிமைகளெல்லாம் பெறுவதற்குத் திருவேங்கடமுடையானை ஆச்ரயிக்கவேண்டுவதில்லை, திருமலையின் ஆச்ரயணமே போதுமென்கிறார். வானவர் வானவர்கோனொடும் மாமலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு அமர்ந்து நமன்று எழும் திருவேங்கடம் தடம் குன்றம் நங்கட்குச் சமன்கொள்வீடு தரும் - என்று அந்வயக்ரமம். மா என்பது மலர்க்குமாத்திரம் விசேஷணமன்று, நீர் சுடர் தூபங்கட்கும் விசேஷணம். புஷ்பம் தீர்த்தம் தீபம் தூபம் ஆகிய இவை மிகச் சிறந்த வஸ்துக்களாகத்தேடி ஸம்பாதிக்கப்படவேண்டு மென்கிறதன்று; பக்தியின் கனத்தாலேயாகஞ் சிறப்பு விவக்ஷிதம். சுமந்து என்றதும் அதுபற்றியே யென்க. இவ்விடத்தில் ஒரு இதிஹாஸம் அருளிச்செய்கிறார். அதாவது - ஸ்ரீ ஜகந்நாதததில் எம்பெருமான் செண்பகப்பூவை உகந்து சாத்திக் கொள்வது வழக்கமாயிருந்ததனால் சில ராஜகுமாரர்கள் எம்பெருமானுக்குச் செண்பகப்பூ ஸம்பாதித்து ஸமர்ப்பிக்க ஒரே ஒரு பூ மாத்திரம் மிகுந்திரருந்தது. விலை கொடுத்து வாங்கவந்த ராஜகுமாரர்கள் செல்வச்செருக்குடையவர்களாதலால் ஒவ்வொருவரும் இப்பூவை நாமே பெற்றுப் போய் ஸமர்பிக்க வேணுமென்ற ஆவர்கொண்டவராகி மேன்மேலும் விலையை ஏற்றிக்கொண்டவந்தார்கள்; கடைசியாக அளவற்ற விலைகொடுத்து ஒரு ராஜபுத்திரன் அதைவாங்கிப் பெருமாளுக்குச் சாத்த அன்றிரா அவனுடைய கனவிலே எம்பெருமான் காட்சி தந்து ‘ சீ இட்டபூ எனக்குக் கனத்துச் சுமக்க வொண்ணாததாயிருக்கிறது’ என்றருளிச் செய்தான் என்பதாம். இதனால், எம்பெருமானுக்கு அன்புடன் எதையிட்டாலும் அது அவனுக்கு அலப்யலாப மாயிருக்குமென்பது போதரும்.

English Translation

The dark Venkatam Lord worshipped by Indra and all the celestials with flowers, incense, lamp and water, gives up tranquil liberation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்