விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தலைப்பெய் காலம்*  நமன்தமர் பாசம் விட்டால்,* 
    அலைப்பூண் உண்ணும்*  அவ் அல்லல் எல்லாம் அகல,*
    கலைப் பல் ஞானத்து*  என் கண்ணனைக் கண்டுகொண்டு,* 
    நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது*  நீடு உயிரே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நமன் தமர் - யமபடர்கள்
தலைப்பெய் காலம் - வந்து கிட்டுங்காலம்
பாசம் விட்டால் - காலபாசத்தை வீசினால்
அலைப்பூண் உண்ணும் - (அப்போது) அலைச்சல் படுகையாகிற
அ அல்லல் எல்லாம் அகல - அந்தத் துயரமெல்லாம் நீங்க,

 

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ஆழ்வார்க்கு ஓடின நிலைமையைக்கண்ட எம்பெருமான் ‘இவரை நாம் ஒருவாறு ஸமாதானப்படுத்தாவிடில் இவர் முடிந்தேவிடுவர்போலும்’ என்றெண்ணித் தான் வடக்குத் திருமலையில் நிற்கும்படியைக் காட்டியருள, ஆழ்வாரும் கண்டு தரித்து, அந்தத் தரிப்பை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார். இப்பாட்டில் முன்னடிகட்கு இரண்டுவகையான நிர்வாஹம் :- இவ்வுயிர்விட்டு நீங்குங்காலத்தில் யமபடர்கள் வந்து கிட்டிப் பாசத்தை வீசினால் அப்போது உண்டாகும் தயரம் பொறுக்கவொண்ணாததாயிருக்கும்; அந்தத்துயரம் நமக்கு நேரவொண்ணாதபடி எம்பெருமான் தன் காட்சியைத் தந்தருளின படியாலே தரிப்புப்பெறலாயிற்று- என்பது ஒரு நிர்வாஹம். மற்றொரு நிர்வாஹமாவது - இங்கு யமதூதர்களால் நேரும் நலிவைச்சொன்னது. அந்தத் துயரத்தோடு ஒத்ததான பகவத் விச்லேஷ வ்யஸநத்தைச் சொன்னவாறு; அது தொலையும்படி எம்பெருமானை ஸேவிக்கப்பெற்றே னென்கிறார் என்பதாம். ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின் :- “அத்தோடு ஸஜாதீயமான அல்லல் என்று எம்பார் அருளிச்செய்வது. (அதாவது) அவ்வோபாதி க்லேசம் போருமாயிற்று பகவத் விச்லேஷத்தால் வருமது இவர்க்கு. அன்றிக்கே, பகவத் அலாபமேயானபின்பு யமசந்யதையும் வந்ததே யன்றோவென்று அந்த யமவச்யதை போம்படியாக என்று ஆண்டான் நிர்வஹிக்கும்படி.”

English Translation

The pall of affliction so strong over me, as if the god of death had come throwing his snare, is over now, for I have my Krishna in my heart, He is the Lord of knowledge and eternal life.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்