விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேவு துன்ப வினைகளை*  விடுத்துமிலேன்,*
    ஓவுதல் இன்றி*  உன் கழல் வணங்கிற்றிலேன்,*
    பாவு தொல் சீர்க் கண்ணா!*  என் பரஞ்சுடரே,* 
    கூவுகின்றேன் காண்பான்*  எங்கு எய்தக் கூவுவனே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துன்பம் மேவு - பலவகைத் துயரங்களை விளைக்கவல்ல
வினைகளை - பாவங்களை
ஓவுதல் இன்றி - இடையறாமல்
உன் கழல் - உனது திருவடிகளை
வணங்கிற்றிலேன் - பணிவதும் செய்திலேன்

 

விளக்க உரை

எம்பெருமானே! உன்னைப் பெறுகைக்கு நான் ஏதேனும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணியிருந்தேனாகில் அந்தப் பற்றாசுதன்னை வைத்துக் கொண்டாவது ‘ஏன் நமக்கு இன்னமும் இரங்கி யருளவில்லை?’ என்று நான் கரைந்து கூப்பிடலாம்; நானோ ஒரு ஸாதாநாநுஷ்டாநமும் பண்ணாதவன்; அப்படியிருந்தும், ஸாதநங்களை நிறைய அநுஷ்டித்துப் பலன் கைபுகப் பெறாதவன் கிடந்து துடிக்குமாபோலே நானும் துடித்துக் கதறுகின்றேனே! இது என்ன! என்று தமக்குத்தாமே விஸ்மயப் பட்டுக் கொள்ளுகிறார். மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன் = நாம் செய்கிற தீவினைகளை நல்வினைகளினால் போக்கிக் கொள்ள வேணுமென்பது நூற்கொள்கை; நானோ பாவங்களை மாத்திரஞ் செய்தேனேயன்றி அவற்றைப் போக்கவல்ல நற்கிரிசை யொன்றுஞ் செய்திலேன். எள்ளில் எண்ணெய்போலவும், கட்டையில் நெருப்புப் போலவும், இவ்வாத்மாவோடு பிரிக்க முடியாதபடி பொருந்தியிருப்பனவும் பலபல துன்பங்களை வினைப்பனவுமான பாபங்களை விஹிதகர்மாநுஷ்டானத்தாலே போக்கிக் கொண்டேனில்லை.

English Translation

O Lord Krishna, my eternal glory-flood! Alas, I have not ceased my lowly Karmas not relentlessly worshipped your lotus feet, "Krishna", I call, O where can I see you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்