விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓதுவார் ஓத்து எல்லாம்*  எவ் உலகத்து எவ் எவையும்,* 
    சாதுவாய் நின் புகழின்*  தகை அல்லால் பிறிது இல்லை,*
    போது வாழ் புனம் துழாய்*  முடியினாய்,*  பூவின்மேல் 
    மாது வாழ் மார்பினாய்!*  என் சொல்லி யான் வாழ்த்துவனே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓதுவார் ஒத்து எல்லாம் - அந்யயனம் செய்கிறவர்களை விட்டு நிரூபிக்கப்படுகின்ற ஸகல வேதங்களும்
எவ்வுலகத்து எவ் எவையும் - மற்றும் பலவுலகங்களிலுமுண்டான பலவகைப்ப்ட சாஸ்திரங்களும்
சாது ஆய் - (பொய் கலவாமல்) உள்ளபடியே சொல்லுகின்றனவாகி
நின் புகழின் தகை அல்லால் - உன்னுடைய குணநீர்த்தனத்தில் தத்பரங்கள் என்கிற இவ்வளவல்லாமல்

விளக்க உரை

உரை:1

ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும், மற்றும் எந்த உலகத்திலும் எப்படிப்பட்ட சாத்திரங்களும், உமது புகழைத் தான் ஓதுகின்றன! பிறிதொன்றுமில்லை! மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும் திருமுடியினாய்! அலர் மேல் மங்கை வாழும் மார்பினாய்! உம்மை வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்! 

உரை:2

எம்பெருமானைத் துதிக்க அவதரித்த வேதங்களும் பகவத்குண கீர்த்தனத்தில் அந்வயம் பெற்றவத்தனையே யொழிய வேறில்லை; ஆக, வேதங்களின் கதியே அதுவாகும்போது; நான் பேசித் தலைக்கட்டுவதென்று ஒன்றுண்டோ என்கிறார். (ஓதுவாரோத்து) ஒத்து என்று வேதத்திற்குப் பெயர்; ஓதுவார்களையிட்டு நிரூபிக்கப்படுவன வேதங்கள்; (எங்ஙனே யென்னில்;) ஆதர்வணம், தைத்திரீயம், காண்வம், என்று வ்யபதேசங்கள் விளைந்திருப்பதானது ஓதுவார்களையிட்டு வந்ததன்றோ, ஆசார்ய ஹ்ருதயத்தில்- “வேதம் ஒதுவாரோத்தாகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர்பெற்றது” என்றவிடமும் அவ்விடத்து வியாக்கியமான ஸ்ரீஸூக்தியும் காணத்தக்கன. எவ்வுலகத்து எவ்வெவையும் = ப்ரமாணங்களான சாஸ்த்ரங்கள் இந்நிலவுலகத்தில் இருப்பதுபோல் மற்றும் பல வுலகங்களிலுமுண்டே; ஸ்வர்க்கலோகத்திலும் ப்ரஹ்ம லோகத்திலும் ஆங்காங்குள்ளாருடைய ஞான வளவுக்குத் தக்கபடியே. பிரமாணங்கள் பரந்திருக்கும். ஸ்ரீராமாயணமென்கிற ஒரு க்ரந்தத்தை யெடுத்துக் கொள்வோம்; இது இவ்வுலகில் ஸங்கிரஹப்படியாயும், ப்ரஹ்மலோகத்தில் விஸ்தாரப்படியாயு மிருப்பது ப்ரஸித்தம். இங்ஙனமே மற்றுங் காண்க. ஆக இப்படிப்பட்ட ச்ருதீதிஹாஸ புராணாதிகள் யாவும் (சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை) உன்னுடைய புகழை வர்ணிப்பதில ஸம்பந்தப்பட்டிருக்கின்றன என்பது தவிர வேறில்லை; ஒரு குணத்தையும் முற்றமுடியச்சொன்னபாடில்லை என்றவாறு. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்; - “உன்னுடைய கல்யாண குண விஷயமான வித்தனை போக்கிப் புறம்பு போயிற்றில்லை. விஷயந்தன்னை எங்கு மொக்க விளாக்குலை கொண்டதுமில்லை.”

English Translation

Even the scriptures and whatever else the world reads, do but speak of your glory only in part. Lord of Tulasi crown and lotus chest! O How can I praise you enough?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்