விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நலம் என நினைமின்*  நரகு அழுந்தாதே,* 
    நிலம் முனம் இடந்தான்*  நீடு உறை கோயில்,*
    மலம் அறு மதி சேர்*  மாலிருஞ்சோலை,* 
    வலம் முறை எய்தி,*  மருவுதல் வலமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

மலமறுமதிசேர் என்றதற்கு இரண்டு வகையான நிர்வாஹ முண்டு, * மதிதவழ்கின்ற மாலிருஞ்சோலை யாகையாலே திருமலை சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கையாலே. சந்திரன் போகும்போது, சிகரங்களிலே தேய்ப்புண்டு சாணையிலிட்டாற்போலே களங்கமற்றிருக்கும்படியைச் சொல்லுகிற தென்று ஒரு நிர்வாஹம் (மதி – சந்திரன்) இனி, வடமொழியாக்க்கொண்டால் மதியென்று புத்திக்குப்பெயர், நிர்மலமான புத்தியை (பக்தர்கட்கு)ச் சேர்விக்கின்ற திருமலை என்பது பிள்ளானுடைய நிர்வாஹம். புத்திக்கு மலமாவது – ஸந்தேஹம், ப்ரமம், மறப்பு முதலியனவாம். திருமலையைத் தொழுவார்க்கு மயர்வற்ற மதியுண்டாகுமென்றபடி. மலமறுமதிசேர் என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறலாம். ஆழ்வான் ஸுந்தரபதஹுஸ்வத்தில் – “யதீயசிகராகதாம் சசிகலாம் து சாகாம்ருகா, திரிக்ஷ்ய ஹர சேகரீ பவநம் ஆம்ருசந்தஸ் த்த, ஸ்பருசந்தி த ஹி வேதாந்தரஸமாச்ரிதேதி ஸ்புடம்“ என்கிறார். திருமலையினுச்சியில் உள்ள குரங்குகள், அங்கே சந்திரன் கையால் எட்டிப்பிடிக்கக் கூடியவனாக இருந்தும், அவன் ருத்ரசிரஸ்ஸம்பந்தமாகிற தோஷம் படைத்தவனென்பது பற்றி, அவனைத் தொடுவது மில்லையென்று, ஒரு அதிசயோக்தி கூறினாராகிறார். அப்படிப்பட்ட தோஷத்தைச் சந்திரன் போக்கிக் கொள்வதற்காக வந்து சேருமிடமான திருமலை – என்னலாம்.

English Translation

Think well and do not sink into hell. The lord who lifted the earth from water lives in the temple of maliumsoali in peace. Worshipping him is the only good.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்