விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஈதே யான் உன்னைக்*  கொள்வது எஞ்ஞான்றும்,*  என் 
    மை தோய் சோதி*  மணிவண்ண எந்தாய்,*
    எய்தா நின் கழல்*  யான் எய்த,*  ஞானக் 
    கைதா* காலக் கழிவு செய்யேலே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் - எனது அநுபவத்திற்கு உரிய
மை தோய் சோதி மணி வண்ணம் எந்தாய் -
கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற வடிவழகுள்ள ஸ்வாமியே!
யான் - நான்
எஞ்ஞான்றும் - என்றைக்கும்
உன்னை - தேவரீரிடத்தில்

விளக்க உரை

கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற நிறத்தையுடைய என் எந்தையே! எப்பொழுதும் யான் உன்னிடத்தில் கேட்பது இஃதேயாம்; ‘எஃது?’ என்னில், தனது முயற்சி கொண்டு அடைய முடியாத உன் திருவடிகளை யான் அடையும்படி ஞானமாகிய கையைக் கொடு; காலம் நீட்டித்தல் செய்யாதே.

English Translation

O My dark effulgent Lord, here is a" ask of all times, -grant me the hands of knowledge, that I may grasp your precious lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்