விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அணைவது அரவு அணைமேல்*  பூம்பாவை ஆகம் 
    புணர்வது,*  இருவர் அவர் முதலும் தானே,*
    இணைவன்*  ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,* 
    புணைவன்*  பிறவிக்கடல் நீந்துவார்க்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரவு அணை மேல் - ஆதிசேஷ சயனத்தின் மீது
அணைவது - சேர்வது
பூ பாவை ஆகம் புணர்வது - பெரிய பிராட்டியின் திருமேனியைக் கூடுவது; (ஆகிய இவை நித்ய விபூதியில் எம்பெருமானுடைய காரியங்கள்)
அவர் இருவர் - ப்ரஸித்தர்களான பிரமன் ருத்ரன் என்கிற இருவர்க்கும்
முதலும் தானே - முதல்வனும் அப்பெருமான் தானேயாயிருப்பன்; (அவதார முகத்தாலே)

விளக்க உரை

இப்பதிகத்தில் கூறப்படும் பொருள். இப்பாசுரத்தில் சுருங்கவருளிச் செய்யப்படுகிறது. முதலடி நித்ய விபூத்யைச்வர்யத்தைக் காட்டுகின்றது. சேஷசயனத்தின்மீது பள்ளி கொள்ளுதலும், பெரியபிராட்டியின் திருமார்போடே அணையப்பெறுதலும், அவ்விபூதியிலைச்வர்யத்திற்கு எல்லையென்க. மற்றமூன்றடிகளால் இவ்வுலகத்தார்க்கு அவன் செய்யும் செயல் திறம் சொல்லுகிறது. லீலாவிபூதியை நிர்வஹிக்கும் விஷயத்தில், காரணேச்வரராக பரஸித்தர்களான பிரமன் சிவன் என்பவர்களின் உற்பத்தி ஸ்திதி முதலியவற்றுக்கும் தானே முதல்வனாய், ரக்ஷயமான ஜகத்திலுள்ள ஸமஸ்த பதார்த்தங்களுக்கும் அவதாரமுகத்தாலே ஸஜாதீயனாயிருப்பவனாய், ரக்ஷணத்திற்கு மேலெல்லையான மோக்ஷ ப்ரதானத்திற்கும் கடவனாய், ஸர்வமுக்திப்ரஸங்கம் வாராமைக்காக ஸம்ஸாரக்கடலை நீந்திக் கரையேற வேண்டுவார்க்குத் தெப்பமாயிருப்பவன் எம்பெருமான், என்றதாயிற்று.

English Translation

My Lord prevading all things, reclines on a serpent couch, with the perfectly matching lotus-dame. The Lord who made Brahma. Siva and all else is the life-buoy for the drowning.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்