விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பற்பநாபன் உயர்வு அற உயரும்*  பெரும் திறலோன்,* 
    எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு*  எனக்கே தன்னைத் தந்த
    கற்பகம்,*  என் அமுதம் கார் முகில் போலும்*  வேங்கட நல் 
    வெற்பன்,*  விசும்போர் பிரான்*  எந்தை தாமோதரனே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் அமுதம் - எனக்குப் பரம போக்யனும்
கார்முகில் போலும் - காளமேகம் போன்றவனும்
வேங்கடம் நல்வெற்பன் - திருவேங்கடமென்கிற நல்ல திருமலையை இருப்பிடமாகவுடையவனும்
விசும்போர்பிரான் - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
தாமோதரன் - ஆச்ரித விதேயனுமான எம்பெருமான்

விளக்க உரை

மிகவும் விலக்ஷணனாய் மிகவும் எளியனாய் என்னையடிமைகொண்ட எம்பெருமான், என்னைத்தவிர வேறொன்றையும் அறியாதபடியானான், என்கிறார். ஸயலஜகத்தும் உத்பத்தியாவதற்குக் காரணமான திருநாபிக் கமலத்தை யுடையவனாய், பேசப்புகுந்தால் அளவிட்டுப் பேசமுடியாத செளர்யவீர்யம் முதலிய திருக்குணய்களையுடையனாய், இவ்வளவு மேன்மைகிடக்க என்பக்கலிலே ஊற்றமுடையனாய், எனக்கு தன்னை ஸர்வஸ்வதானம் பண்ணினபடியாலே எனக்குக் கல்பகவ்ருக்ஷ மென்னலாம்படி யிருப்பவனாய், யாசகனாகிய என்னையும் உத்பத்தி பண்ணித் தந்தருளினமையாலே கல்பகவ்ருக்ஷத்திற் காட்டிலும் சிறப்புப்பெற்றவனாய், எனக்குப் பரமபோக்யனாய், கொடுத்தோமென்று நினையாதே கொடுக்கும் மேகத்தின் ஔதார்யம் போன்ற ஔதார்யத்தையுடைய திருவேங்கடமலையில் வாழ்பவனாய், நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருந்து வைத்து அனகரான இடையர்கட்குமிடைச்சிகட்கும் கட்டவுமடிக்கவுமாம்படி வந்து அவதாரித்து அச்செயலாலே என்னையாட்படுத்திக் கொண்டானானான், என்றாதாயிற்று.

English Translation

"Padmanabha' is the mighty one, higher than the highest. He is my kalpa tree, he made me his and himself mine. He is my ambrosia, dark as the rain cloud, in Venkatam. My Lord Damodara is the Lord of high celestials too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்