விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிக்கெனச் சிறிது ஓர் இடமும்*  புறப்படாத் தன்னுள்ளே,*  உலகுகள் 
    ஒக்கவே விழுங்கிப்*  புகுந்தான் புகுந்ததற்பின்,*
    மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்*  துளக்கு அற்று அமுதம் ஆய்,*  எங்கும் 
    பக்கம் நோக்கு அறியான்*  என் பைந்தாமரைக் கண்ணனே.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறிது ஓர்இடமும் - மிக அற்பமான இடமும்
புறப்படா - வெளிப்பட்டிராமல் (எல்லாம் உள்ளே யடங்கும்படி)
உலகுகள் - உலகங்களை
தன் உள் - தனக்குள்ளே
ஒக்க - சமமாக

விளக்க உரை

எம்பெருமான் ஆழ்வார்தம்மோடே கலந்து மிக்க ஒளிபெற்றானாய்க் கொண்டு வேறு போக்கிடமற்றுத் தம் பக்கலிலேயே படுகாடு கிடச்சிறபடியைப் பேசுகிறார். “உலகுகளொக்கவே விழுங்கிப் புகுந்தான்” என்ற சொல்நயத்தை நோக்கி ஆறாயிரப்படியில் பிள்ளானருளிச் செய்கிறார்-“ஜகத் ஸ்ருஷ்ட்யாதி அந்ய பரதையைப் போக்கிக் கொண்டு என்னுள்ளே புகுந்தான்” என்று. அதை அடியொற்றி ஈடு முப்பத்தாறாயிரத்திலும்- “நாம் ஆழ்வாரை யநுபவிக்கும்போது செருப்புவைத்துத் திருவடிதொழப்புக்காப்போலே யாகவொண்ணாது என்றுபார்த்து ஜகத்ரக்ஷணத்துக்கு வேண்டும் ஸம்விதாநமெல்லாம் பண்ணி அநந்யபரனாய் அநுபவித்து, போகமாட்டாதேயிருந்தான்; ராஜாக்கள் அந்த; புரத்திலே புகுவது நாட்டுக்கணக்கு அற்ற பின்பிறே” என்றருளிச் செய்தார். பாசுரத்தில் உலகுகளை விழுங்கினது மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும், ஜகத்ரக்ஷணார்த்தமர்க எம்பெருமான் செய்யும் ஸகல காரியங்களுக்கும் அது உபலக்ஷணமாக இங்குக் கொள்ளத்தக்கது. உலகுக்குச் செய்யவேண்டிய காரியங்களை யெல்லாம் ஒருவாறு செய்து முடித்துக்கொண்டு க்ருதக்ருத்யனாய், ஆழ்வாரை யநுபவிக்கப் புகுந்தானாம்.

English Translation

My Lord of lotus eyes, swallower all within a trice, container of all the worlds in himself, has entered me. An un-quivering flame of effulgent knowledge, he is my ambrosia bottled inside me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்