விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இவள் இராப்பகல்*  வாய்வெரீ இத்,*  தன 
    குவளை ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  வண்டு
    திவளும்*  தண் அம் துழாய் கொடீர்,*  என 
    தவள வண்ணர்*  தகவுகளே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவள் - இப் பெண்பிள்ளை
இரா பகல் - இரவும் பகலும்
வாய் வொரி இ - வாய்பிதற்றி
தன - தன்னுடைய
குவலை ஒண் கண் - நெய்தல் மலர்போன்றழகிய கண்களில்

விளக்க உரை

பெண்பிள்ளையின் தயநீயதசையைச் சொல்லி, இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? என்கிறாள். இரவும் பகலும் இவள் விஷயமாக நீர்வாய் வெருவவேண்டியது போய் உம் விஷயமாக இவள் விஷயமாக இவள் வாய் வேண்டும்படியாயிற்றே! அநித்ரஸ் ஸததம் ராமஸ் ஸூப்தோபி ச நரோத்தம; ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹாந் ப்ரதிபுத்யதே. என்று சொன்ன திருவடியின் வார்த்தையைக்கொண்டு அறியலாமே நீர்வாய் வெருவினபடி. அப்படிப்பட்ட வாய்வெருவுதல்கள் இப்போது இவள் பணியாயிற்றே! அவ்வளவேயோ! ஆனந்தக் கண்ண நீர்; பெருக வேண்டிய கண்கள் சோகக் கண்ணீர் பெருகநின்றனவே! இவள் ஏதேனும் அதிகமாக ஆசைப்பட்டதுண்டோ? விரஹஜ்வரத்தாலே வாடின இவள் மார்விலுள்ள மாலையை வாங்கி, உம்முடைய மார்லுள்ள செவ்விமாறாத மாலையைக் கொடுத்தால் போதுமே; வண்டு பண்ணின தவமும் இவள் பண்ணவில்லை போலும் ஒரு வண்டாகப் பிறக்கப் பெற்றிலேனே யென்று துவளாநின்றாள் காணும் இவள் அலமாபபுத்தீர இத்தனை திருத்துழாய் ப்ரஸாதமும் கொடுக்கின்றீரில்லையே.

English Translation

She raves madly night and day, her beautiful eyes brim with tears. Alas, you do not give her your Tulasi, Such is your compassion, O Great one!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்