விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குழாம் கொள் பேர் அரக்கன்*  குலம் வீய முனிந்தவனை,* 
    குழாம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த,*
    குழாம் கொள் ஆயிரத்துள்*  இவை பத்தும் உடன் பாடி,* 
    குழாங்களாய் அடியீர் உடன்*  கூடிநின்று ஆடுமினே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடியீர் - பக்தர்களே!
குழாம் கொள் - கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட
பேர் - மிக்க பெருமை பொருந்திய
அரக்கன் - ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய
குலம் - குடும்பம்

விளக்க உரை

ஒவ்வொரு பதிகத்திலும் ஈற்றுப் பாசுரத்தில் பயனுரைத்து வருகின்ற ஆழ்வார் இப்பதிகத்திற்குப் பயன் கூறாது, இத்திருவாய்மொழி, பாகவதர் பெருந்திரளாக இருந்து அநுபவிக்கத்தக்கது என்று சொல்லித் தலைக்கட்டுகின்றார். இதற்கொரு பலன் எதிர்பார்க்கவேண்டா; பெரிய கோஷ்டியாக இருந்து இதனை அநுபவிப்பதுதானே ஸ்வயம் ப்ரோயஜனம் என்று தெரிவித்தவாறு. அன்றியே, இத்திருவாய்மொழியைக் கற்கப்பெறில் என்னைப்போல் தனியேயிருந்து துவளாமல் பாகவதகோஷ்டிகளுடன் கூடி அனுபவிக்கும்படியான பெரும்பேறு பெறுவீர்கள் என்று இதனை இத்திருவாய்மொழி கற்கையின் பயனாகவே அருளிச்செய்தாரென்றுங் கொள்ளலாம். ஆடுமின் என்றது ஆடப்பெறுவீர்களாக என்றபடி. குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனை = கூட்டங் கூட்டமாகக் கூடி நலிந்து கொண்டிருந்த இராவணனை வேரோடுங் களைந்தொழித்த இராமபிரானைக் குறித்து என்றபடி. * ஆகர்ணபூர்ணைரிஷிபிர் ஜீவலோகம் துராஸகை;, காரிஷ்யே மைதிலீஹேதேர் அபிசார்ச மராக்ஷஸம். * என்று ஆரண்ய காண்டத்தில் சோதிவாய் திறந்து அருளிச் செய்தபடியே செய்து தலைகட்டினபடி.

English Translation

This decad of the well-arranged thousand songs spoken with feeling by Kurugur satakopan addresses the Lord who, angrily destroyed Lanka, Devotees, come and join the band, and eyes, sing and dance with us!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்