விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காறை பூணும் கண்ணாடி காணும்*  தன் கையில் வளை குலுக்கும்* 
    கூறை உடுக்கும் அயர்க்கும்*  தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்* 
    தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்*  தேவன் திறம் பிதற்றும்* 
    மாறில் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவள் - இப்பெண்பிள்ளையானவள்;
காறை - பொற்காறையை;
பூணும் - (தன் கழுத்தில்) பூணா நின்றாள்;
கண்ணாடி காணும் - கண்ணாடிப் புறத்தில் காணாநின்றாள்;
தன் கையில் - தன் கையிலிருக்கிற;

விளக்க உரை

உரை:1

எம்பெருமானது வரவை எதிர்பார்த்திருந்த என்மகள் தன் ஆற்றாமையலே ‘ஏதேனுமொன்றைச் செய்து நாம் அவனைப் பெறவேணும்’ என்று நினைத்து; ‘அவன் மனமிழுப்புண்ணுமாறு நாம் நம்மை அலங்கரித்துக் கொண்டால் அவன் தானே வந்து மேல்விழுவன்’ என்று, முதன்முதலாக அவன் கண்டு மகிழ்ந்து கட்டிக்கொள்ளுமிடமான கழுத்தைக் கண்டிகை முதலிய பூஷணங்களால் அலங்கரித்து, இவ்வலங்காரம் அவன் உகக்கும்படி வாய்த்ததா என்பதை உணருகைக்காக அவ்வழகைக் கண்ணாடிப் புறத்திலே காண்பதும், இம்மனோரதமடியாக உடம்பில் ஒரு பூரிப்புத் தோற்றுகையால் அதன் அளவை அறிகைக்காகக் கைவளைகளை அசைத்துப் பார்ப்பதும், அவன் உகக்கத்தக்க பட்டுப்புடவையை அவ வருமளவுங் களைவதும் உடுப்பதும், இப்படி அவன் வரவுக்கு உடலாகத் தன்னை அலங்கரித்தவளவிலும் அவன் வரக்காணாமையாலே அறிவழியாநிற்பதும், மீண்டும் அறிவு குடிபுகுந்து ‘இன்னமும் அவன் விரும்பி வருகைக்கு உடலாகச் சில அலங்காரங்களைச் செய்துகொள்வோம்’ என்று தனது கொவ்வைக் கனிவாயைத் தாம்பூல சர்வணாதிகளால் மிகவுஞ் சிவக்குமாறு பரிஷ்கரிப்பதுமாயிருந்துகொண்டு, அவ்வளவிலே தனது அலங்காரவகைகள் நன்கு வாய்த்தமையையும், ஆசாலேசமுடையாரையும் விரும்பிக் கைக்கொள்ளுகையாகிற அவனுடைய சீர்மையையும் அநுஸந்தித்துத் தெளிந்துநின்று வரவை யெதிர்பார்க்க, அவ்வளவிலும் அவன் வரக்காணாமையாலே மோஹமடையாநின்றாளென்றவாறு.

உரை:2

எல்லாவிதமான நகைகளும் பூணுகிறாள். பின் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாள். தன் கையில் உள்ள வளையல்களைக் குலுக்கிப் பார்த்துக்கொள்கிறாள். புத்தாடை அணிந்து கொள்கிறாள். பின் பெருமூச்சு விடுகிறாள். தன் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயை அழகுறத் திருத்திக்கொள்கிறாள். மயங்கிப் பின் தேறி, மயங்கிப் பின் தேறி, ஆயிரம் பெயர்களை உடைய தேவனின் பெருமைகளைப் பிதற்றுகிறாள். எதிரிகள் இல்லாத மாமணிவண்ணன் மேல் இவள் இப்படி மயக்கம் கொண்டுள்ளாளே.

English Translation

She wears a necklace, looks into the mirror, shakes her bangles, sets her Saree right, faints, then applies rough on her coral lips, stands up, steadies herself and begins to recite the thousand names of the peerless gem-hued Lord Krishna. Alas, she is infatuated!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்