விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எனது ஆவியுள் கலந்த*  பெரு நல் உதவிக் கைம்மாறு,* 
    எனது ஆவி தந்தொழிந்தேன்,*  இனி மீள்வது என்பது உண்டே,*
    எனது ஆவி ஆவியும் நீ*  பொழில் ஏழும் உண்ட எந்தாய்,* 
    எனது ஆவி யார்? யான் ஆர்?*  தந்த நீ கொண்டாக்கினையே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனது ஆவிஉள் கலந்த - என் ஆத்மாவுக்குள்ளே நீ ஒரு தன்மையாய்க் கலக்கப்பெற்ற
பெரு நல் உதவி -
நல்ல மஹோபகாரத்திற்கு
கைம்மாறு - பிரதியுபகாரமாக
எனது ஆவி - என் ஆத்மாவை
தந்தொழிந்தேன் - உனக்கு அர்ப்பணஞ் செய்து விட்டேன்

விளக்க உரை

உலகத்தில் ஒருவர் ஒரு உபகாரஞ்செய்தால் உபகாரம்பெற்றவர் பிரதியுபகாரஞ் செய்வதென்று ஒரு முறைமையுண்டாதலால் அதன்படியே ஆழ்வாரும் எம்பெருமானுக்குக் கைம்மாறு செய்யக்கருதி ஆத்மஸமாப்பணமாகிற கைம்மாறு செய்ததாக முந்துறக்கூறி, உடனே ஆராய்ந்து பார்த்து, ஆத்மாவஸ்து நம்முடைய தாகிலன்றோ நாம் கொடுத்ததாக ஆகும் நாமும் நம்முடைமையுமெல்லாம் அவலுடைய சரக்காகவேயிருக்கும்போது நாம் கொடுத்ததாகக் கூறுவது பிசகு என்று அநுதபித்து ‘உன் வஸ்துவை நீயே கைப்பற்றிக்கொண்டாயத்தனையல்லது நான் ஸமாப்பித்ததாகச்சொல்லுவது உசிதமன்று’ என்று தலைக்கட்டுகிறார். இப்பாசுரத்தின் ஆறாயிரப்படி யருளிச்செயல் பரமபோக்கியம்; அது வருமாறு;-“இப்படி எம்பெருமானோடு கலந்த கலவியாலுள்ள நிரவதிகப்ரிதியாலே அறிவழிந்து ‘இவ்வாத்மா தம்முடையதன்று’ என்று நிரூபிக்கமாட்டாதாராய், அவன் தம்மோடு கலந்த இப்பெருநல்லுதவிக்குக் கைம்மாறாகத் தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளாவடிவமையாகக் கொடுத்து, பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து தருகிற நான் ஆர்! தரப்புகுகிற இவ்வாத்மா ஆர்! பண்டேயுனக்கு

English Translation

In exchange for your great favour of mingling with me, I have you my heart; now how can I every retrieve it? O Lord who swallowed the seven worlds! You are the soul in my heart. Who am I? What is mine? You gave and took what is yours

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்