விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறியாக் காலத்துள்ளே*  அடிமைக்கண் அன்பு செய்வித்து,* 
    அறியா மா மாயத்து*  அடியேனை வைத்தாயால்,*
    அறியாமைக் குறள் ஆய்*  நிலம் மாவலி மூவடி என்று,* 
    அறியாமை வஞ்சித்தாய்*  எனது ஆவியுள் கலந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறியாமை - (தனது உண்மையை பிறர்) அறியாதபடி
குறள் ஆய் - வாமன மூர்த்தியாகி
மாவலி - ‘மகாபலியே!
மூ அடி நிலம் என்று - மூன்றடி நிலம் (வேணும்) என்று சொல்லி
அறியாமை - (கபட குணத்தை பிறர்) என்று சொல்லி

விளக்க உரை

அறிவு தோன்றுதற்கு உரியதல்லாத மிக்க இளம்பருவத்திலேயே நம்மாழ்வார் இறைவனிடத்துப் பேரன்பு கொண்டவராயினர்; அங்ஙனம் அன்பு கொள்ளுமாறு இறைவன் அருள் புரிந்தான் என்று இப்பகுதியில் கூறுகின்றார். இதனால், ஆழ்வார் ஓதாது உணர்ந்த ஞானச்செல்வர் என்பது ஒருவாறு கிடைக்கின்றது.

English Translation

My years of innocence were steeped in the Maya of delusion, You crept into my heart and planted the love for devotion. Like an innocent child you came and asked. "Three steps of Earth, O Great Bali", and deceived him!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்