விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏறனை பூவனை*  பூமகள் தன்னை,* 
    வேறுஇன்றி விண் தொழத்*  தன்னுள் வைத்து,*
    மேல் தன்னை மீதிட*  நிமிர்ந்து மண் கொண்ட.* 
    மால் தனின் மிக்கும் ஓர்*  தேவும் உளதே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேறு அன்றி - வேறாக அல்லாதபடி
தன் உள் - தனது திருமேனியில்
விண் தொழ - விண்ணுளார்தொழும்படி
வைத்து -  இடங்கொடுத்து வைத்தவனாயும்
மேல் தன்னை - மேலுலகத்தை

விளக்க உரை

அயர்வறுமமரர்கள் தன்னுடைய சீலகுணத்தைக் கண்டு தொழுகைக்காக ஸர்வேச்வாரியான பெரிய பிராட்டியாரோடொக்கப் பிரமன் முதலானார்க்கும் தன்னை ஆச்ரயமாகக் கொடுத்துக்கொண்டிருக்கையாலும், ஸகல லோகங்களும் திருவடிகளினுள்ளே யடங்கும்படி அளந்தருளுகையாலும் இவனே ஸர்வேச்வரன், வேறில்லை யென்கிறார். இதில் முன்னடிகளிற் கூறப்படுகின்ற விஷயத்தைப்பற்றி முதற்பத்தில் ”வலத்தனன் திரிபுரமொரித்தவன்” என்ற பாட்டினுரையில் விரிவாகக் கூறப்பட்டுளது; அங்குக் கண்டு கொள்க. ஏறு-இடபம் அதனையுடையவன் ஏறன். பூவை(ப்பிறப்பிடமாக) உடையவன் பூவன். விண்தொழ ஸ்ரீவிண்ணவர்கள் இந்த சீலகுணத்திலீடுபட்டுத் தன்னைத் தொழ என்றபடி. ‘விண்தொழவைத்து’ என இயையும்.

English Translation

The bull-rider Siva, the lotus-born Brahma and the lotus-dame, Lakshmi reside on his person inseparably. The gods worship him, Rising over the sky, he took the Earth and all. an there be a god greater than him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்