விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திண்ணன் வீடு*  முதல் முழுதும் ஆய்,* 
    எண்ணின் மீதியன்*  எம் பெருமான்,*
    மண்ணும் விண்ணும் எல்லாம்*  உடன் உண்ட,*  நம் 
    கண்ணன் கண் அல்லது*  இல்லை ஓர் கண்ணே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வீடு முதல் - மோக்ஷம் முதலாக
முழுதும் ஆய் - எல்லாவற்றையும் அளிப்பவனாய்
ஏண்ணின் மீதியன் - நினைவுக்கு அப்பாற்பட்டவனாய்
எம்பெருமான் - எமக்கு ஸ்வாமியாய்
மண்ணும் விண்ணும் எல்லாம் - பூமியும் ஆகாசமுமாகிய முழுவதையும்

விளக்க உரை

கண்ணபிரானே உலகுக்கெல்லாம் நிர்வாஹகனென்கிறார். மோக்ஷம் முதலிய ஸகல புருஷார்த்தங்களையும் அளித்தருள்பவனாய், எண்ணிறந்த திருக்குணங்களையுடையனாய் அக்குணங்களைக்காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவனாய், பிரளயாபத்து வந்தபோது பூமி முதலான ஸகல லோகங்களையும் ஒருசேரத்திருவயிற்றிலே வைத்து நோக்குபவனான நமது கண்ணபிரானே உலகுக் கெல்லாம் கண்ணாயிருப்பவன். திண்ணன் என்றவிடத்து மகரனசரப்போலியாய், திண்ணம் என்றபடியாகக் கொண்டால், இப்போது சொல்லுகிற விஷயம் அசைக்க முடியாதது என்றவாரும். ‘தின் நல் வீடு’ என்று கொண்டு திடமாயும் விலக்ஷணமாயு மிருக்கிற, மோக்ஷமென்றதாகவுங் கொள்ளலாம். ஒருநாளுமழியாத பரமப்தம் முதலிய ஸகல லோகங்களையும் தன் விபூதியாகவுடையவன் என்றும் பொருளாகலாம். எண்ணின்; மீதியன் என்றால் எண்ணுக்கு மீறியுள்ளவன் என்றபடி குணங்களாலோ விபூதிகளாலோ எண்ணை மீறினவனென்றபடியாய் வாங்மநஸாபாரிச்சேத்ய ஸ்வரூபரூபகுண விபூதிகளுடைமை சொல்லிற்றாகுமென்க.

English Translation

My Lord, -bestower of heaven and all else, -swallowed the Earth and sky. He is beyond comprehension. He is my Krishna, dear as my eyes, Other than him, there is no doer. This is certain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்