விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம்பிரானை*  எந்தை தந்தை தந்தைக்கும்- 
    தம்பிரானை,*  தண் தாமரைக் கண்ணனை,*
    கொம்பு அராவு*  நுண் நேர் இடை மார்பனை,* 
    எம்பிரானைத் தொழாய்*  மட நெஞ்சமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மட நெஞ்சமே - விதேயமான மனமே!
எம் பிரானே - எமக்கு உபகாரகனும்
எந்தை தந்தை தந்தைக்கும் தம் பிரானை - (நம்மளவில் நில்லாமல் நம் குலத்திற்கெல்லாம் நாதனாயிருப்பவனும்
தண் தாமரைக் கண்ணனை  - குளிரக்கடாக்ஷிக்கின்ற தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
கொம்பு - வஞ்சிக்கொடியினும்

விளக்க உரை

 எனக்கு உபகாரத்தைச் செய்தவனை, என் குடிக்கெல்லாம் உபகாரத்தைச் செய்தவனை, குளிர்ந்த செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனை, பூங்கொம்பையும் பாம்பையும் போன்ற நுட்பமான மெல்லிய இடையையுடைய திருமகளைத் திருமார்பில் உடையவனை, எம்பிரானை, மடமையையுடைய மனமே! வணங்குவாய்.

English Translation

O Heart, wroship the cool lotus-eyed Lord! On his chest he bears the lotus-dame Lakshmi whose hips are slender like a snake or a twig. He is the Lord of my father, his father and the forefathers before him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்