விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கு வெண்மணல் கொண்டு*  சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்* 
    சங்கு சக்கரம் தண்டு வாள்*  வில்லும் அல்லது இழைக்கலுறாள்* 
    கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில*  கோவிந்தனோடு இவளைச்* 
    சங்கை யாகி என் உள்ளம்*  நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே.* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொங்கு - நுண்ணியதாய்;
வெள் - வெளுத்திராநின்ற;
மணல்கொண்டு - மணலாலே;
முற்றத்து - முற்றத்திலே;
சிற்றில் - கொட்டகத்தை;

விளக்க உரை

உரை:1

இம்மகளை வெளியிற் புறப்படவொட்டிலன்றோ இவள் தீயிணக்கிணங்காடி வருகின்றாள், இனி உள்முற்றத்திலிருந்துகொண்டே விளையாடச் சொல்லுவோமென்று, தாயாகிய நான் அங்ஙனமே நியமித்து வைத்தால், இவள் முற்றத்தில் சிற்றிலிழைக்க ஒருப்பட்டாலும் எம்பெருமானது பஞ்சாயுதங்களை இழைக்கின்றாளேயொழிய வேறுகிற்றிலிழைப்பதில்லை; தலைமகனை வசப்படுத்துதற்கு முக்கியஸாதநமான முலைகளோ, ஆண் முலைக்கும் பெண்முலைக்குமுள்ளவாகி தோற்ற முகந்திரண்டு இவளுக்குக் கிளரவில்லை; இப்படிக்கொத்த இவளது இளமையைப் பார்த்தால் “தலைமகனோடு இவள் இணங்கினாள்” என்ன முடியவில்லை; இவள் செய்யும்படிகளைப் பார்த்தால் இவ்விணக்கம் சங்கிக்கும்படியாயிருக்கின்றது; ஆகையால் ஒன்றையும் நிர்ணயித்தறியமாட்டாமையாலே என் நெஞ்சு தடுமாறா நின்றதீ! என்கிறாள். சிற்றிலும் என்ற விடத்துள்ள உம்மை - இழைக்கலுறில் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. தட்டுளுப்பு - தடுமாற்றம். ஸ்வாபதேசத்தில் சிற்றில் என்று ??? தேஹத்தையும், வாஸஸதாநமான வீடு முதலியவற்றையுஞ் சொல்லுகிறது. இவ்வாழ்வார் ப்ராக்ருதமான சமுரத்தைப்பூண்டு இல்லற வாழ்க்கையாயிருக்கச் செய்தேயும் விஷயாந்தரங்களில் öநஞ்சைச் செலுத்தாது, எம்பெருமானது திவ்யாயுதங்களின் அம்சமாக அவதரித்துள்ள மஹாபாகவதர்களையே தியானித்துக்கொண்டிருக்கும்படியைக் கூறுதல், முன்னடிகளுக்கு உள்ளுறை பொருள்; இனி, முலை என்று ஸ்வாபதேசத்தில் பக்தியைச்சொல்லுகிறது; எம்பெருமானைச் சேர்ந்து அநுபவித்தற்கு உபகரணமான பக்தி முதிர்ந்து பேற்றுக்குச் சாதனமான பரமபக்தியாகப் பரிணமித்ததில்லை; இப்படியிருக்கச் செய்தே இவருக்கு பகவத் விஷயத்தில் இவ்வளவு அவகஹம் வாய்த்தவாறு எங்ஙனே? என்று சிலர் சங்கித்தல், பின்னடிகளுக்கு உள்ளுறைபொருள்.

உரை:2

எல்லாக் குழந்தைகளைப் போல் இவளும் மணல் வீடு கட்டி விளையாடுவாள் என்று பார்த்தால், சங்கு சக்கரம் தண்டு வில் வாள் என்று நாரணன் ஆயுதங்களையே மண்ணில் இழைத்து விளையாடுகிறாள். இவளுக்கு இன்னும் முற்றிய கன்னிப் பருவம் வரவில்லை. ஆனாலும் கோவிந்தனோடு இவள் மனம் ஈடுபட்டு என் உள்ளம் தடுமாறும் படி ஆகிவிட்டதே.

English Translation

When she makes sand castles in the portico and decorates them with fine white sand, she cannot think of any motif other than conch, discus, mace, dagger and bow. Her breasts have hardly risen. Yet every time I suspect she was with Govinda, my heart misses a beat.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்