விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாயிற் பல்லும் எழுந்தில*  மயிரும் முடி கூடிற்றில* 
    சாய்வு இலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி* 
    தீ இணக்கு இணங்கு ஆடி வந்து*  இவள் தன் அன்ன செம்மை சொல்லி* 
    மாயன் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாயில் - (இம்மகளுடைய) வாயில்;
பல்லும் எழுந்தில - பற்களும் முளைக்கவில்லை;
மயிரும் முடி கூடிற்றில - மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை.;
இவள் - இப்படிப்பட்ட இவள்;
இவண் - இந்தப் பருவத்தில்;

விளக்க உரை

“முள்ளெயிறேய்ந்தில கூழைமுடிகொடா” என்ற பெரிய திருமொழியோடு முதலடியை ஒப்பிடுக. இளம்பருவத்தளானவிவள் தாய்க்கடங்காத சில தண்ணிய பெண்களோடு சேர்ந்து அது அடியாகப் பகவத் விஷயத்திலே ஊன்றி, அவ்வூற்றத்தை மறைப்பதற்காகச்சில பொய்களைப் பேசி, ‘கண்ணா! மணிவண்ணா!’ என்று இடைவிடாது வாய்வெருவுகின்றாளென்று கூறியவாறு. குறுந்தலை - குறுமையில் தலைநின்ற = நீசர்வகுப்பில் முதல் நின்ற என்றபடி. (தீயிணக்கிணங்காடி வந்து) தன்னோடு கலந்தவர்களைத் தாய்க்கடங்காதபடி கலக்கறுக்கவல்ல பகவத்விஷயத்திலே அவகாஹித்து என்றபடி. தன் அன்ன - குறிப்புப் பெயரெச்சமன்று; இரண்டாம் வேற்றுமையுருபு தொக்கது. தான் எவ்வளவு ருஜுவாக இருக்கின்றாளோ, அவ்வளவு ருஜுவாயுள்ள வார்த்தைகளைச் சொல்லி என்று எதிர்மறையிலக்கணையாகக் கூறியவாறு. எம்பெருமானை வசப்படுத்துகைக்காகச் செய்யவேண்டிய வாசிகங்களான ஸ்தோத்ரங்களும் காயிதங்களான ப்ரணாமாதிகளும் பூர்ணமாகப்பெறாதிருக்கவும், கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்று உறக்கமற்ற சிறுமாமனிதர்களில் அபிமாநத்தைப் பெற்றுப் புறம்புண்டான பற்றுக்களை அறுத்துத் தரவல்ல எம்பெருமானை ஸம்ச்லேஷிக்கப் பெற்றுக் “கோரமாதவஞ்செய்தனன் கொலறியேன்” என்றாற்போன்ற ஸ்ரீஸூக்திகளால் பகவத்விஷயத்தில் தமக்குள்ள அபிநிவேசத்தை வெளிப்படுத்திய ஆழ்வார்படியை அன்பர் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்.

English Translation

Her teeth have not grown, her hair does not gather; moving in the company of brazen girls, she has learnt bad things. Defending herself, she goes into raptures over the gem-hued wonder-Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்