விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓடும் புள் ஏறி,*  சூடும் தண் துழாய்,*
    நீடு நின்றவை,*  ஆடும் அம்மானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீடு நின்ற அவை - நித்யஸூரிகளாயிருக்கின்ற பெரிய திருவடி முதலானரோடு
சூடும் - கூடிப்பரிமாறுகிற
அம்மான் - ஸ்வாமி
புள் ஏறி - பெரியதிருவடிமேற்கொண்டு
ஓடும் - (விரைந்து) ஓடுவன்;

விளக்க உரை

அம்மான், கருடப்பறவையின்மேல் ஏறி உலாவுதல் செய்வான்; குளிர்ந்த திருத்துழாய் மாலையினைச் சூடிக்கொள்வான்; அச்செயல்கள் எப்பொழுதும் நிற்க, அவற்றோடு கலந்து பழகுவான்.

English Translation

Our own lord, he wears cool Tulasi, rides the Garuda bird and lives with eternals.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்