விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து* 
    அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப* 
    அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்* 
    செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புவியுள் - பூமியிலே;
நான் கண்டது ஓர் அற்புதம் - நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் (சொல்லுகிறேன்);
கேளீர் - கேளுங்கள்; (அதுயாதெனில்);
பூணி - பசுக்களை ;
மேய்க்கும் - மேய்க்காநின்ற;

விளக்க உரை

இப்பூலோகத்தினுள் நான் கண்ட அற்புதமொன்றுண்டு, கேளுங்கள்; கண்ணபிரான் இவ்வுலகிலூதின குழலினோசை மேலுலகத்தளவும் பரந்து செல்ல, அங்கு அதனைக் கேட்ட தேவர்களில் ஒருவர் தப்பாமல் தமது மேன்மைக்கேற்ப அந்தணர் யாகங்களில் தரும் ஹவிஸ்ஸுக்களையும் உண்ண் மறந்து ‘கண்ணன் பிறந்து வளருகின்ற ஊர்’’ என்று கொண்டு திருவாய்ப்பாடியேறத் திறண்டுவந்து புகுந்து கூட்டத்தின் மிகுதியினால் ஒருவரை ஒருவர் நெருக்கி நின்று அக்குழலினோசையைக் காதுகளால் நன்கு பருகி அக்கண்ணபிரான் சென்றவிடங்களுக்கெல்லாந் தாங்களும் பின்னே சென்று அவனை ஒரு நொடிப் பொழுதும் விட்டகலமாட்டாதொழிந்தனர்; இதிலும் மிக்க அற்புதமுண்டோ? என்றவாறு தேவர்கள் உண்பது அமுதமாய் இருக்க “அமுதுணா மறந்து” என்னாது “அவியுணாமறந்து” என்றானது. தங்கள் மேன்மைக்கு உறுப்பு அவியுணவேயாகையால் அமுதத்தைக்காட்டிலும் தாங்கள் விரும்பி உண்பது ஹவிஸ்ஸானமைப்பற்றியென்க;”அந்தணர் யாகத்திலே ஸமர்ப்பிப்பது” என்ற விசேஷமுண்டிறே ஹவிஸ்ஸுக்கு. கண்ணன் குழலூதுவது விருந்தாவனத்தில் எனனாநிற்க, தேவர்கள் ஆயப்பாடியிற்புகுந்ததென்? எனில்; கீழ்க்கச்சிக் கோயிலில் நடக்கும் பேரருளாளனது பெரிய திருவடி திருநாளுக்கென்று வந்த திரள் கூட்டத்தின் மிகுதியால் அங்கேறப் புகுரமாட்டாது, மேற்க்கச்சிப் புறத்தளவிலே நிற்குமாபோலக்கொள்க; எனவே, இக்குழலோசை கேட்கவந்து திரண்டுள்ள ஜனங்கள் கண்ணபிரானைச் சுற்றிப் பற்பல காததூரத்தளவாக நின்றனரென்று திரளின் மிகுதி கூறியவாறாம். திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களும் கண்ணனிருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்டால், இனித் தேவர் நிற்குமிடம் எதுவாகக்கூடுமென்று ஆய்ந்துணர்க. (செவிஉள்) நாவில் -என்று ஒரு சொல்லாக்கொண்டு நாவினால் என்று உரைத்தலுமொன்று; ”செவிக்கு நாவுண்டோவென்னில், ‘செவியுணா நீட்ட’ என்னக்கடவதிறே; சேதநஸமாதியாலே சொல்லுகிறது; அன்றிக்கே, செவிக்கு உணவாயிருந்துள்ள இனிதான **** பூஜித்து என்னவுமாம்; ’செவுக்குணவில்லாதபோழ்து’ (குறள்) என்றானிறெ” என்ற ஜீயருரை இங்கு அறியத்தக்கது. ரஸத்தை கிரஹிப்பது எதுவோ, அது நாக்கு என்று கொண்டு, இசையின் சுவையை கிரஹிக்குங் கருவியைச் செவியுள்நா என்றதாகக்கொள்க. ஒளபசாரிகப் பிரயோகமரத்தனை. உணா - உணவு என்பதன் விகாரம். அமரலோகம் - வட சொற்றொடர்.

English Translation

Listen to this miracle that I saw on Earth; in the midst of young cowherd-lads grazing calves, the serpent-reclining Lord played his flute that resounded in high heaven. All the gods forgot to partake of the fire oblations and came down in hordes to the cowherds’ Appadi, to drink the sweet music with their ears and followed Govinda wherever he went.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்