விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கர விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசை* 
    வரன் நவில் திறல் வலி*  அளி பொறை ஆய்நின்ற*
    பரன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொல்* 
    நிரல் நிறை ஆயிரத்து*  இவை பத்தும் வீடே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரம் - திடமான
விசும்பு - ஆகாசமென்ன
எரி - அக்னியென்ன
வளி - வாயுவென்ன
நீர் - ஜலமென்ன

விளக்க உரை

திடமான ஆகாயமும், நெருப்பும், காற்றும், தண்ணீரும், மண்ணும் என்னும் இவற்றின் தன்மைகளான சிறந்த ஒலியும், தெறலும், வலியும், தண்ணளியும், பொறுத்தலும் ஆகிய இவையாகி நின்ற இறைவனுடைய திருவடிகளின்மேல், திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த, முறைமுறையாக நிறுத்தப்பட்ட ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அளிக்கக் கூடியனவாம்.

English Translation

The decad of the thousand songs by Kurugur Satakopan on the Lord who exists in Fire, Earth, Water, sky and Air, subtly as heat, mass, coolness strength and sound, offers liberation to those who recite it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்