விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்*  தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்* 
    நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்*  கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*
    அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்*  அமுத கீத வலையால் சுருக்குண்டு* 
    நம் பரம் அன்று என்று நாணி மயங்கி*  நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம்பெரு தடகண்ணன் - சிவந்து மிகவும் பெரிய திருக்கண்களையுடையனாய்;
திரள் தோளன் - பருத்த தோள்களையுடையனாய்;
தேவகி சிறுவன் - தேவகியின் பிள்ளையாய்;
தேவர்கள் சிங்கம் - தேவசிம்ஹமாய்;
நம் பரமன் - நமக்கு ஸ்வாமியான பரமபுருஷனாயிராநின்ற கண்ணபிரான்;

விளக்க உரை

-கண்ணபிரானூதின குழலினோசை செவியில் விழப்பெற்ற கந்தருவர்கள் பட்ட பாட்டைப் பகருகின்றேன் கேளுங்கள்;--பரமபோக்யமான இக் குழலோசையாகிற வலையிலே அவர்கள் கட்டுப்பட்டு, “இனிப் பாட்டுத் தொழிலாகிற பெருஞ்சுமையில் நமக்கு யாதொரு அந்வயமுமில்லை” என்று நிச்சயித்தொழிந்ததுமன்றி, கீழுள்ள காலமெல்லாம் தாம் பாடித் திரிந்தபடியை நினைத்து அதற்காகவும் வெட்கப்பட்டு, மேல் ஒன்றும் நினைக்கவொண்ணாதபடி அறிவையுமிழந்து உடலும் மனமும் கட்டழிந்து இவ்வாறான தங்கள் தளர்த்திய வாயினாற் சொல்லவும் வல்லமையற்று “இனி நாங்கள் ஒன்றுஞ்செய்ய மாட்டுகிறிலோம்” என்பதைத் தெரிவிக்கிற பாவனையாக ஊமையர் ஸம்ஜ்ஞை காட்டுவது போலக் கையைமறித்துக் காட்டிநின்றனராம். கைமறித்தல்-குடங்கையைத் திருப்பிக் காட்டுதல்; என்னிடமொன்றுமில்லையே என்பதைத் தெரிவிக்க வேண்டுவார் இவ்வாறு காட்டுதல் உலகில் வழங்குவது காண்க. உற்றன இடர் – உற்ற இடர்களை என்றபடி. அம்பரம் – வடசொல் “****“ என்ற வடசொல் காந்தப்பர் என மருவிற்று. அமுதகீதம் “***“ உவமைத்தொகை, பராங்முகமாகத் திரியுமவர்களையும் வலிய இழுக்குந்தன்மைபற்றி அமுதகீதவலை எனப்பட்டது. பரம்-“***“. போர்க்களத்தில் தோற்றவர்கள் “போர்செய்யும் பாரம் இனி நமக்குவேண்டா“ என்று கையெழுத்திட்டுப்பேசுவதுபோல, ஸங்கீத வித்தையில் தோற்ற கந்தருவரும் நம்பரமன்றென்றொழிந்தனரென்க.

English Translation

Our Lord of large red eyes and strong arms is Devaki’s child, lion of the gods. Listen to how the ones who heard him play his flute suffered misery: the Gandharvas roaming in the sky were caught in the net of his nectar-sweet songs; enchanted and shamed, they folded their hands and fell into meek submission. Saying this is beyond us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்