விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்*  தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்* 
    கானகம் படி உலாவி உலாவிக்*  கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது* 
    மேனகையொடு திலோத்தமை அரம்பை*  உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி* 
    வானகம் படியில் வாய் திறப்பு இன்றி*  ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.*a

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேனுகன் - தேநுகாஸுரன்;
பிலம்பன் - ப்ரலம்பஸுரன்;
காளியன் - காளியநாகம்;
என்னும் - என்று சொல்லப்படுகிற;
தீப்பபூடுகள் அடங்க - கொடிய பூண்டுகளையெல்லாம்;

விளக்க உரை

கானகமென்றது - விருந்தாவனத்தை யென்றுணர்க. அவ்விடத்தில் கண்ணபிரான் ஊதுகின்ற குழலினிசையைக் கேட்ட மேனகை முதலிய மேம்பட்ட மாதரும் “இனி நாம் ஆடுகையாவதென், பாடுகையாவதென்!” என்று நாணங்கொண்டு பிறருடைய ஏவுதலின்றித் தாமாகவே அந்த நித்தியகர்மாநுஷ்டாநத்தைத் தவிர்ந்தனர்; எனவே கண்ணபிரானுடைய விலாஸங்களின் திறம் வீறு பெற்றுள்ளமை விளங்கும். தேவமாதர் ஆடும்போதை நடையழகையும், பாடும் போதைப் பாட்டின்பத்தையும் கண்ணபிரானது நடையழகும் குழலோசையும் வென்றன வென்றவாறு. வாய்திறப்பின்றி - “இனி நாம் வானிலும் நிலத்திலும் ஆட, பாட என்று வாயாலுஞ் சொல்லக்கடவோமல்லோம்”” என்று ஆணையிட்டுக்கொண்டபடி “உருப்பசியர் அவர்”” என்று பிரிக்கவேணுமென்பர் பலர். தேனுகன் - கழுதையின் வடிவங்கொண்டு நலியவந்த அஸுரன். ப்ரலம்பாஸுரனைக் கொன்றவன் பலராமனாயிருக்க, கண்ணன் கொன்றதாகக் கூறியது, ஒற்றுமை நயம் நீக்கியென்க. பூண்டுகளென்றது-புன்மைபற்றி.. கானகம்படி-காட்டு நிலத்திலே என்றுமாம்.

English Translation

As easily as pulling out deadly weeds, the dark child Krishna killed Dhenuka, Pralamba, Kaliya and others, who roamed in the forest freely. When he played flute, Menaka in the company of Tillottama, Ramba, Urvasi and other Apsaras listened, enchanted and shamed, then silently,--on their own,--gave up singing and dancing in Heaven and on Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்