விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் இடைகழி எம் மாயவனை,*  பேய்அலறப்,-

    பின்னும் முலைஉண்ட பிள்ளையை,* -அள்ளல்வாய்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரியை - நரஸிம்ஹாவதாரஞ் செய்தவனாய் (அல்லது) ஹயக்ரீ வாவதாரஞ் செய்தவனாய்
அருமறையை - ஸகல விதயாஸ்வருபியாய்
முன இ உலகு உண்ட முர்த்தியை - முன்னொருகால் இவ்வுலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸ்வாமியாய்
கோவலூர் இடைகழி மன்னும் எம்மாயவனை - திருக்கோவலூரடை கழியில் நித்யவாஸம் பண்ணுகிற எங்கள் திருமாலாய்
பேய் அலற முலை உண்ட பிள்ளையை - பூதனையானவள் கதறும்படியாக அவளது முலையை உண்ட பிள்ளையாய்

விளக்க உரை

கோவலூர் – மாயவனை – கோபாலன் எனப்படுகிற ஆயனார் எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசமானதுபற்றி இதற்குத் திருக்கோவலூரென்று திருநாமமாயிற்று. வடமொழியில் இது கோபாலபுரம் எனப்படும். “பாவருந்தமிழற் பேர்பெறு பனுவந் பாவலர் பாதிகாளிரவின், மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் இது. இடைகழி – தேஹளீ என்று வடமொழியிற் கூறப்படும். “வாசற்கடை கழியாவுள்புகா காம்ரூபங்கோவல் இடைகழிய பற்றியினி நீயுந்திருமகளும் நின்றாயால்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரம் நோக்குக. அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூர் – “சேறு கண்டு இறாய்க்கக்கடவ அன்னங்களும் சேற்றைக்கண்டு இறாயாதே மேல் விழுந்து ஸஞ்சரிக்கும்படியான போக்யதையுடைய திருவழுந்தூரிலே நித்யவாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோரூபனை“ என்ற அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீஸூக்தி காண்க. அழுந்தூர் – தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சரிக்குந் தன்மையனான உபரி வஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பஷபாதமாகத் தீர்ப்புச் சொன்னமையால் ரிஷிகளால் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுத்தப்பெற்ற இடமானதுபற்றி இதற்கு அழுந்தூரென்று பெயர் வந்த்தென்பர், தேரழுந்தூர் எனவும் வழங்குவர் பிரகிருத்த்தில் மூலத்திலுள்ள தேர் என்னுஞ் சொல் ரதத்தைச் சொல்வதல்ல, தேர்தலாவது தேடுதல் புள்ளுப்பிள்ளைக் கிரைதேடு மழுந்தூரென்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்