விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்னுறு நோய் யானுரைப்பக் கேள்மின்,*  இரும்பொழில்சூழ்-
    மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,*
    பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,*
    என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்,*  -நோக்குதலும்- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாவியேற்கு என்று உறு நோய் - பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை
யான் உரைப்ப கேண்மின் - நானே சொல்லக் கேளுங்கள் (என்னவென்றால்)
இரு பொழில் சூழ் - விசாலமான சோலைகள் சூழப்பெற்றதும்
மறையோர் மன்னும் - வைதிகர்கள் வாழப்பெற்றதுமான
திரு நறையூர் - திருநறையூரில்

விளக்க உரை

இங்ஙனே ஊரிலுள்ள பெண்களின் சரித்திரங்களை எடுத்துரைப்பதனால் எனக்கு என்ன பயனாம்? அந்த வம்புக் கதைகளையெல்லாம் விரித்துரைப்பதற்கோ நான் பெண் பிறந்தது. அது கிடக்கட்டும், நான் பட்டபாடு நாடறியச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திருநறையூ ரெம்பெருமான் ஸ்ந்நிதியிலே ஸேவிக்கப்புகுந்த தான் பட்டப்பாட்டைப் பேசத் தொடங்குகின்றாள் பரகால நாயகி. பாவியேற் கென்னுறு நோய் என்று இங்ஙனே அந்வயித்துப் பொருள் கொள்வதிற் காட்டிலம் ‘பன்னியுரைக்குங்காற் பாரதமாம் பாவியேற்கு“ என்று கீழோடே அந்வயிப்பது பூருவர்களின் வியாக்கியானங்களுக்கு நன்கு பொருந்தும்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்