விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,*
    அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,*
    பொன்னுடம்பு வாட புலனைந்தும் நொந்தகல,*
    தன்னுடைய கூழைச் சடாபாரம் தான்தரித்து,*  ஆங்கு-
    அன்ன அருந்தவத்தின் ஊடுபோய்,*  -ஆயிரந்தோள்- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாள் நிலா மின்னு மணி முறுவல் செம் வாய் - ஒளிபொருந்திய நிலாப்போல் விளங்குகின்ற அழகிய புன்னகையையுடைய சிவந்த அதரத்தையுடையளாய்
உமை என்னும் - உமா என்னும் பெயரையுடையளாய்
அன்னம் நடையை அணங்கு - அன்ன நடையை யுடையளான (பார்வதி யென்கிற) தெய்வப் பெண்ணானவள்
தன்னுடையகூழை - தனது மயிர் முடியை

விளக்க உரை

தக்ஷப்ரஜாபதி யென்பவர்க்குப் பெண்ணாகப் பிறந்து, ஸதீ என்ற பெயரோடிருந்தாள் பார்வதி. அந்த தக்ஷப்ரஜாபதயானவர் ஒரு கால் ஓரிடத்தில் வேள்விக்குச் செல்ல அப்போது அங்கேயிருந்த தேவர்களும் மஹர்ஷிகளுமெல்லாரும் சடக்கென எழுந்து கௌரவிக்க, பிரமனும் சிவனும் எழுந்திராமல் இருந்தபடியே யிருக்க தக்ஷன் பிரமனை லோக்குருவென்று நமஸ்கரித்துவிட்டுத் தனது கௌரவம் தோற்றச் சிவன் எழுந்திருந்து வணங்கவில்லை யென்று சீற்றங்கொண்டு “இந்த ருத்ரன் எனக்கு மாப்பிள்ளையானபோதே எனக்கு சிஷ்யனாயிருந்து வைத்து என்னை கண்டவாறே ஆசாரியனைக் கண்டாற்போல் கௌரவித்து வழிபடவேண்டியிருக்க இப்படி எழுந்திராதே இருக்கிறான்ன்றோ, இவனில்மிக்க கொடும்பாவி உலகிலுண்டோ? இப்படிப்பட்ட மூடனுக்கு அநியாயமாய் அருமந்த பெண்ணைக் கொடுத்து கெட்டேனே“ என்று பலவாறாக நிந்தித்து ‘தேயஜ்ஞத்தில் இப்பாவிக்கு ஹவிர்ப்பாகம் கிடைக்காமற் போகக்கடவது‘ என்று சாபமும் – கூறிவிட்டு மஹா கோபத்துடனே எழுந்து தன்னிருப்பிடம் போய்ச்சேர்ந்து, பிறகு நேடுநாளைக்கப்பால் அந்த தக்ஷன் ப்ருஹஷ்பதிஸவமென்றொரு யாகம் பண்ணத் தொடங்கின செய்தியை மகளாகிய ஸதி (பார்வதி) கேள்விப்பட்டுத் தந்தையின் வேள்வி வைபவங்களை நாமுங்கண்டுவருவோம்

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்