விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் வடநெறியே வேண்டினோம்*  -வேண்டாதார்-
    தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின்,*

    அன்னதோர் தன்மை அறியாதார்,*  -ஆயன்வேய்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மான் நோக்கின் அன்னம் நடையார் - ‘மான் போன்ற நோக்கையும் அன்னம் போன்ற நடையையுமுடைய மாதர்கள்
அவர் ஏச - (உலகத்தார்) பழிதூற்றும் படி
ஆடவர் மேல் - புருஷர்களின் மேலே (ஆண்களை நோக்கி)
மன்னும் மடல் ஊரார் என்பது ஒர் வாசகமும் - மடலூரக் கூடாது“ என்று சொல்லுகிற ஒரு வாக்கியத்தை
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு - தமிழ்ப் பாஷையில் கேட்டு அறிந்திருக்கிறோம்.

விளக்க உரை

சிறந்த காம புருஷார்த்தத்தையே நாம் கடைப்பிடிப்போம் என்றார் கீழ். தாம்பற்றின பகவத் காமம் தமக்குக் கைகூடாமையாலே அதற்காக மடலூர்வதே கதி என்பதைத் திருவுள்ளத்தில் அறுதியிட்டு, “புருஷனை நோக்கி ஸ்த்ரீகள் மடலூர்வது கூடாது“ என்று தமிழர் ஒரு வரம்பு கட்டிவைத்திருக்க, ஸ்த்ரீயாகிய நீர் எங்ஙனே மடலூரப்புகுவீர்? என்று சிலர் ஆக்ஷேபித்ததாகக் கொண்டு அவ்வாக்ஷேபத்தை அநுவதித்து அதற்கு ஸமாதாநமும் அருளிச்செய்கிறார். மடலூர்வதென்பது நாணத்தை அறவே யொழித்துக் காதலை வெளிப்படையாக்கித் தெருவேற்ப்புறப்பட்டுச் செய்யுங் காரியமாதலால், நாணத்தையே ஸர்வஸ்வமாகக் கொண்ட மாதர்கட்கு இக்காரியம் கூடவே கூடாதென்று தமிழர் மறுத்தனர். அந்த ஸித்தாந்தத்தையே “கடலன்ன காமத்தராயினும் மாதர், மடலூரார் மற்றையார்மேல்“ இத்யாதிகளால் பின்புள்ளார் வெளியிட்டனர். காதல் கடல்போல் வளர்ந்து கிடந்தாலும் அபவாதத்துக் ஆஸ்பதமான மடலூர்தல் பெண்டுகளுக்கு கூடாதென்பது தமிழர்களின் கொள்கையாயிருந்தாலும் அதனை நான் உசிதமாகக் கொள்ளேனென்கிறார் ஆழ்வார். மடலூர்வதற்குக் காமத்தின் மிகையே அதிகாரமாதலால் அப்படிப்பட்ட காம்முள்ளவர்கள் ஆணாயிருந்தாலென்? பெண்ணாயிருந்தாலென்? யாரேனும் மடலூரலாம், ஆசையை வரம்பிட்டுக்காக்க ஆராலும் முடியாது, அரசராணைக்குக் கட்டுப்படுமோ ஆசை, வேலியடைத்தால் நிற்குமோ வேட்கை, அளவு கடந்த வேட்கையின் காரியமாக விளையக்கடவதான் மடலூருகையை ஆண்கள் தாம் செய்யலாம், பெண்கள் செய்யலாகாதென ஒரு வரம்பு கட்டுவதானது ப்ரேமத்தின் போக்கை அறியாதவர்களுடைய செயலாமத்தனை யென்பது ஆழ்வாருடைய திருவுள்ளம். மன்னும் வடெநெறியே வேண்டினோம் –ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹாபாரதம் முதலிய வடநூல்களில் –ஸீதை, உஷை முதலிய பெண்ணரசிகள் நாணந்தவிர்ந்து தத்தம் காமத்தை நன்கு வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்பட்டிருத்தலால் என்னுடைய ஸித்தாந்தம் வடமொழி நூல் நெறிக்கு ஒக்குமென்றாராயிற்று. கம்பராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலிய தமிழ் நூல்களில் இவ்வர்த்தம் இருந்தாலும் அவை வழிநூலேயன்றி முதனூல்லலாமை அறிக. ஆழ்வார் புருஷர்தானே, ஸ்த்ரீ அல்லரே, இவர் மடலூர்வது தென்னுரைக்கு இணங்கியதேயன்றி விருத்தமன்றே என்று சிலர் நினைக்கக்கூடும். இவர் பிற்பகல் புருஷரேயாயினும் புருஷோத்தமனை அநுபவிக்குந் திறந்தில் ஸ்த்ரீபாவத்தை யடைந்தனராதலாலும், மேலே “என்னுடைய பெண்மையும் என்னலனும் என்முலையும்“ என்று அந்த ஸ்த்ரீபாவத்தையே விளங்கக் காட்டுகின்றனராதலாலும் இப்போது இவர்க்கு ஸ்த்ரீத்வமே உள்ளதென்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்