விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆராய்வார் இல்லை அழல் வாய் மெழுகு போல்* 

    நீராய் உருகும் என்ஆவி*--நெடுங்கண்கள் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனக்கு இங்கு ஆராய்வார் மற்று இல்லை - என்னைப் பற்றிக் கவலைகொண்டு விசாரிப்பவர்கள் இங்கு யாருமில்லை.
என் ஆவி - எனது ஆத்மவஸ்து
அழல் வாய் மெழுகு போல் நீர் ஆய் உருகும் - நெருப்பினருகே வைத்த அரக்குப்போல் நீர்பண்டமாக உருகா நின்றது.
நெடுகண்கள் தாம் - நீண்ட கண்களும்
ஊரார் உறங்கிலும் உறங்கா - எல்லாரும் உறங்கும் போதிலும் உறங்கமாட்டா,

 

விளக்க உரை

ஆற்றாமை கரைபுரண்டால் சிலபேரோடே ஸல்லாபங்கள் செய்து ஒருவாறு தரித்திருக்க வேண்டாவோ? இப்படிப்பதறலாமோ? என்று சிலர் சொல்ல, அவர்கட்கு மறுமொழி கூறுகின்றாள் பரகாலநாயகி. என் வார்த்தைகள் யாருக்கும் பிடிக்க மாட்டாவாகையால் என்னோடு உசாவ ஆரும் வரமாட்டார்கள், என் பேரைச் சொன்னாலும் காதை மூடிக் கொள்வார்கள். உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்துக்கு உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணனென்றிருக்கு மெனக்கும் என்ன சேர்ந்தியுண்டு? என்னெஞ்சம் எனக்கு உதவாதிருக்க வேறு உதாத்துணையாவாருண்டோ? நெருப்பினருகே வைத்தமெழுகுபோலே சிதிலமாகநின்றது ஆத்மவஸ்து, உலகத்தாரைப்போலே உறங்கியாகிலும் ஆற்றலாமென்று பார்த்தால் எல்லாரு முறங்கினாலும் என் கண்கள் உறங்குகின்றில இவ்வளவு ஆபத்காலத்திலே வந்து முகங்காட்டி உதவாதவனை மறந்திருக்க வேணுமே, அதுவும் மாட்டாதபடி அவனது திருநாமங்களையே வாய்வெருவா நின்றேன்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்