விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செப்பாடு உடைய திருமால் அவன் தன்*  செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*  
    கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்*  காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*
    எப்பாடும் பரந்து இழி தெள் அருவி*  இலங்கு மணி முத்துவடம் பிறழக்* 
    குப்பாயம் என நின்று காட்சிதரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செப்பாடு உடைய - செவ்வைக் குணத்தையுடையனாய்;
திருமால் அவன் - ச்ரியஃபதியான அக்கண்ணபிரான்;
தன் - தன்னுடைய;
செம் தாமரை கை - செந்தாமரை மலர்போன்ற திருக்கையிலுள்ள;
விரல் ஐந்தினையும் - ஐந்து விரல்களையும்;

விளக்க உரை

செப்பாடாவது - இந்திரனுக்கிட்ட சோற்றையடங்கத் தானமுது செய்து மழைபெய்வித்து ‘இவை பட்டதுபடுக’ என்று ஈரமற்ற நெஞ்சனாயிருக்கையன்றிக்கே தான் முன்னின்று ரக்ஷித்தருளின் செவ்வைக்குணமா இக்குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்ததென்பார். திருமால் என்றார். அவன் - முதல் வேற்றுமைச் சொல்லுருபு. கப்பு -குடைக்காம்பினடியிற் கிளை விட்டாற் போன்றுள்ள வேத்ரதண்டங்கள். கோவர்த்தன மலையை ஒரு குடையாக உருவகப்படுத்தியதற்கேற்பத் தடங்கை விரலைந்தும் மலரவைத்த கண்ணபிரான் கைவிரல்களைக் கப்பாகவும் பாஹுதண்டத்தைக் காம்பாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க. பின்னடிகளின் கருத்து; - (மலைகளில் சுனைநீரருவிகள் இன்றியமையாதன வாகையால்) இம்மலையில் கண்டவிடமெங்கும் பரவிப்பெருகுகின்ற தெள்ளருவிகளானவை அமைந்துள்ள படியைப் பார்த்தால் கண்ணபிரானுக்காக முத்துச்சட்டை ஸித்தப்படுத்தப் பட்டுள்ளது போலும் என உத்ப்ரேக்ஷித்தவாறென்க. குப்பாயம் - சட்டை; “மெய்ப்பை சஞ்சுளி கஞ்சுகம் வாரணம், குப்பாயமங்கி சட்டையாகும்” என்பது - திவாகரம். இங்குச் சந்தர்ப்பம் நோக்கி முத்துச்சட்டை எனப்பட்டது. காட்சி - சி விகுதிபெற்ற தொழிற்பெயர்.

English Translation

The benevolent Lord Tirumal upturned a mount like an umbrella, spread the five fingers of his lotus-hand it like the spokes and help up his beautiful long arm like its stem. The streams of cool water flowing down over the rim formed a tassel; the spray formed a jacket of pearls over him. That mount is Govardhana, the Lord’s victory-umbrella.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்