விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நேராவன் என்றுஓர் நிசாசரிதான் வந்தாளை*
    கூரார்ந்த வாளால் கொடிமூக்கும் காதுஇரண்டும்*

    ஈராவிடுத்து அவட்கு மூத்தோனை* -- வெம்நரகம்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் சீதைக்கு நேர் ஆவன் என்று - தனது தேவியான பிராட்டியோடே நான் ஸமானமாவேனென்று நினைத்து
ஓர் நிசாசரி வந்தாளை - (என்னை மணந்துகொள் என்று சொல்லிக்கொண்டு) ஓடிவந்த சூர்ப்பணகை என்னும் ராக்ஷஸியை
கூர் ஆர்ந்த வாளால் - கூர்மை பொருந்திய கத்தியினால்
கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து - கொடிபோன்ற மூக்கையும் காதையும் அறுத்துத் துரத்தவிட்டு,
அவட்கு மூத்தோனை - அவளுடைய தமையனான கரனை

விளக்க உரை

“வெந்நரகஞ் சேராவகையே சிலை குனித்தான்“ என்ன விதற்கு ஸாமாந்யமாய்ப் பலரும் பொருள் சொல்லக்கூடும் – கரனை நரகத்துக்குப் போக வொட்டாமல் வீர ஸ்வரக்கத்துக்குப் போகச் செய்தார் பெருமாள் – என்று. இப்பொருளை மறந்து விடுங்கள். இங்ஙனல்ல பொருள். களைந்த வில்லுங் கையுமாய் நின்ற பெருமானை கண்ட கரன் “நாம் மேலேபோய் வேறொருநரகயாதனை அநுபவிக்கவேண்டா, எல்லா நரக வேதனையும் நமக்கு இங்கே அநுபவித்தாயிற்று‘ என்று பட்டர் அருளிச்செய்யுபொருள். நஞ்சியர் பட்டரை ஆச்சரியப்பதற்று முன்னே மேல் நாட்டில் வாழுங்காலத்து பட்டருடைய சிஷ்யரொருவரை ஸந்தித்து வார்த்தையாடும்போது ‘எங்களுடைய திவ்ய ப்ரபந்தத்திலே அவட்கு மூத்தோனை வெந்நரகஞ் சேராவகையே சிலை குனித்தான் என்றிருக்கிறது, இதற்கு ஸாமந்யமாக நெஞ்சிற்பட்ட பொருளைச் சொல்லிவிட்டு, ‘உங்களுடைய பட்டர் எங்ஙனே சொல்லுவர்? என்று கேட்க, இங்ஙனே சொல்லுவர் என்று அவர் கூற, இப்பொருள் கூறவல்லபட்டரை நாம் ஸேபிக்கவேணுமென்று அவருக்குக் காதல் கிளர்ந்த்தாகப் பெரியோர் கூறுவர். பட்டருடைய அருளிச் செய்லாக நஞ்சீயர் கேட்டு விஷ்மயப்பட்ட அர்த்த விசேஷனங்கள் பலவற்றுள் இதுவுமென்றென்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்