விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாரார வீக்கி மணிமேகலை திருத்தி* 
    ஆரார் அயில்வேல்கண் அஞ்சனத்தின் நீறுஅணிந்து* 
    சீரார் செழும்பந்து கொண்டுஅடியா நின்றேன் நான்*
    நீரார் கமலம்போல் செங்கண்மால் என்றுஒருவன்*
    பாரோர்கள்எல்லாம் மகிழ பறைகறங்க* 
    சீரார் குடம் இரண்டுஏந்தி* -- செழுந்தெருவே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கதிர் முலையை வார் ஆர வீக்கி - ஒளிமிக்க முலைகளைக் கச்சுநிறையும்படி நெருக்கிக் கட்டி
மணிமேகலை திருத்தி - ரத்னங்களிழைத்த அரைநூல் மாலையை ஒழுங்குபட அணிந்து
ஆர் ஆர் அயில் வேல் கண் - அழகு பொருந்திய கூரிய வேல் போன்ற கண்களை
அஞ்சனத்தின் நீறு அணிந்து - மையின் சுண்ணத்தாலே அலங்கரித்து
சீர் ஆர் செழு பந்து கொண்டு - மிகவும் அழகிய ஒரு பந்தைக்  கையிற்கொண்டு

விளக்க உரை

இனி ஆழ்வார் பரகால நாயகி என்ற திருநாமத்தால் நிர்த்தேசிக்கப்படுவர் தன்னை வினவவந்த சில மங்கைமார்களை நோக்கித் தனது அவஸ்தையைக் கூறத் தொடங்குகின்றாள் பரகாலநாயகி. இதுதானும் பரகால நாயகியான தன்மையாலே சொல்லுவதல்ல க்ருஷ்ணாவதாரத்தில் குடக்கூத்திலே ஈடுபட்டு மெலிந்த ஒரு ஆய்ச்சின் தன்மையை அடைந்து சொல்லுவதாம். “காரார் சூழலெடுத்துக்கட்டி“ என்று தொடங்கி “அஞசனத்தின் நீறணிந்து“ என்னுமளவும் பந்தடிப்பதற்குத் தான் செய்துகொண்ட அலங்காரஙகளைக் கூறுகிறபடி. எனது அலங்காரத்தின் அமைதியைக் கண்டு ஈடுபட்டு என்னைப் புணரவேண்டி அவன்றான் மடலெடுக்க வேண்டியிருக்க, நானன்றோ மடலெடுக்க நேர்ந்தது! என்பது ஸூசனை, வார் – ரவிக்கை, மேகலை – ***** என்ற வடசொல் திரிபு, அரையி லணியும் ஆபரணம். அயில்-கூர்மை. அஞ்சனம்-வடசொல். இங்கே பந்து விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த்தாகச் சொல்லுகிற விதற்கு உள்ளுறைபொருள் யாதெனில் நான் பகவத் விஷயமே அறியாமல் ப்ராக்ருத பதார்த்தங்களிலே மண்டிப் போதுபோக்கிக்கொண்டு சுகமாகக்கிடந்தேன், அங்ஙனே கிடந்த என்னை அநியாயமாக பகவத் விஷயத்திலே கொண்டு மூட்டிக் துன்பப்படுத்தினார்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறபடி. பந்தானது செந்நூல் வெண்ணூல் கருநூல் களாலே கட்டப்படிருப்பதுபோல் ப்ரக்ருதியும் ஸத்வரஜஸ்தமோ குணங்களோடே விசித்திரமான கர்ம ஸூத்ரத்தலே கட்டப்பட்டிருக்கும். பந்து கீழே விழுவதும் மேலே எழுவதுமாயிருக்கிறாப் போலே ப்ரக்ருதியும்-அஜ்ஞனாய் அசக்தனான சேதநன் தான்செய்த கருமங்களுக்கேற்ப மேலுலகங்களில் போவதும் திரும்புவதுமாம்படி ஈச்வரன் தன் விளையாட்டுக்காகத் தன் ஸங்கல்பத்தாலே ப்ரேரிக்கத்தாழ விழுந்தும் உயரவெழுந்தும் சக்ரப்ரமம் போலே கழன்றும் போருகிற ஆத்மாவோடுண்டான ஸம்பந்தத்தினாலே தானும் விழுந்தெழுகை முதலான ஸ்வபாவங்களோடு கூடியதாயிருக்கும். ஆகவே, ஸ்வாபதேசத்தில் பந்து என்று ப்ரச்ருதியைச் சொல்லிக் குறையில்லை.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்