விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறப்பு இறப்பு மூப்புப்*  பிணிதுறந்து,*  பின்னும்- 
    இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-
    ஏதமே*  என்றுஅல்லால் எண்ணுவனே,*  மண்அளந்தான்- 
    பாதமே ஏத்தாப் பகல்? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூப்பு - கிழத்தனத்தையும்
பிணி - வியாதிகளையும்
துறந்து - ஒழிந்து
பின்னும் - அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும் - மிகவும்

விளக்க உரை

ஸம்ஸார நிலத்தில் உண்டாகக்கூடிய எவ்வகைத் துன்பங்களும் தொலைந்து கைவல்ய மென்கிற ஆத்மாநுபவ மஹாநந்தம் கிடைப்பதானாலும் எம்பெருமானுடைய அநுபவமில்லாமல் அவனை மறந்தொழிந்து அநுபவிக்கும் அநுபவமெல்லாம் துக்கமயமேயாகும்- என்கிறாரிப்பாட்டில். மோக்ஷம் இருவகைப்படும்; ஸ்வாத்மாவையே அநுபவிப்பது மற்றொரு மோக்ஷம். இதுவே கைவல்யமோக்ஷ மெனப்படும். பகவததுபவமோக்ஷமே ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததென்றும் கைவல்யமோக்ஷம் ஹேயமென்றும் கைவல்யநிலம் பறைச்சேரிபோலே இகழத்தக்க இடமென்றும் ஆரியர் கொள்வர். மறுபடியும் பிறப்பில்லாமை, பிணியில்லாமை, கிழத்தனமில்லாமை, இறப்பில்லாமை என்னுமிவை மேற்சொன்ன, இருவகை மோக்ஷங்களைப் பெற்றவர்களுக்கும் பொதுவாயினும் கைவல்யமோக்ஷத்தில் பகவத் கைங்கரியமில்லாமையாகிற பெரியதொரு குறை உண்டாகையாலே இக்கைவல்ய மோக்ஷம் ஹேயமா யொழிகின்றது; இவ்வர்த்தமே இப்பாட்டில் அருளிச்செய்யப்படுகின்றது. “ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் (7-39) சொல்லியிருப்பதை அடியொற்றி, “பிறப்பிறப்பு மூப்புப் பணிதுறந்து” எனப்பட்டது. இறக்கவும்- மிகவும்; அளவில்லாமல் என்கை).

English Translation

Even if a person is rid of birth and death, aid age and disease, and attains the great joy of kalvalya, if he forgets to praise the feet of the Lord who measured the Earth, would his days not be a total waste?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்