விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூவையும் காயாவும்*  நீலமும் பூக்கின்ற,* 
    காவி மலர்என்றும் காண்தோறும்,*  -பாவியேன்-
    மெல்ஆவி*  மெய்மிகவே பூரிக்கும்,*  அவ்வவை- 
    எல்லாம் பிரான்உருவே என்று.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூக்கின்ற - புஷ்பிக்கின்ற
பிரான் - எம்பெருமானுடைய
உருவே என்று - திருவுருவமே என்ற கொண்டு
பாவியேன் - அடியேனுடைய
காவி மலர் - செங்கழுநீர்ப் பூவையும்

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாடில் “நிகரிலகு காருருவா” என்று விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அநுஸந்திக்கவே, போலிகண்டு மேல்விழும்படியான அளவிறந்த அன்பு அத்திருமேனியிலே தமக்கு விளைந்தபடியை அருளிச்செய்கிறாரிதில். முதலடியின் முடிவிலுள்ள ‘பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம் (அடைமொழி) பூவை காயா நீலம் எல்லாவற்றிலும் அந்வயிக்கம். அப்போதுõன் மலர்கின்ற பூவைப்பூ, காயாம்பூ, நீலேற்பலம், கழுநீர்ப்பூ என்னுமிவற்றை நான் எப்போதெப்போது காண்கிறேனோ அவ்வப்போதிலெல்லாம் எம்பெருமானுருவைக் கண்டதாகவே நினைத்து ஆவியும் உடலும் பூரிக்கப் பெறுகின்றேன் என்றாயிற்று. பூவை யென்பது காயாமபூவில் ஒரு அவாந்தரபேதம்; “மல்லிகைவனமாலை மௌவல்மாலை” (பெரியாழ்வார் திருமொழி) என்றாற்போல. “காண்தோறும் ” என்னுமளவே போதுமாயிருக்க, “என்றும் காண்தொறும்” என்றதென்னென்னில்; போலிகண்டு பூரித்தலென்கிற இந்த ப்ரமம் ஒருகாலிருகாலன்று; ஒருதடவை அவற்றைக்கண்டு பூரித்த பின்பு ‘ஓ! நாம் ப்ரமித்தோம்; இவை வெறும் புஷ்பங்களே யொழிய எம்பெருமானது திருவுருவமல்ல” என்று தெளிந்து கொண்டாலும், அடுத்த க்ஷணத்தில் இது மறந்து போய், பழைய ப்ரமமே அநுவர்த்திக்கும்; இப்படியே ப்ரமிப்பதும் தெளிவதும், ப்ரமிப்பதும் தெளிவதுமாய் நித்தியம் செல்லுமென்பது தோன்றும். “பாவியேன்மெல்லாவி” என்றவிடத்து, “பாவியேன்” என்றது விபரீதலக்ஷணையால் ‘பாக்யசாலியான என்னுடைய’ என்று பொருள்படவுங்கூடும். போலியான பொருள்களைக் கண்ட மாத்திரத்திலே ஆவியுமுடனும் பூரிக்கும்படியான பாக்கியம் எனக்கேயிறேயுள்ளது என்றவாறாம். “மெல்லாவியும் மெய்யும்” என்னவேண்டுமிடத்து “மெல்லாவிமெய்” என்றது- உம்மைத்தொகை. பூரிக்கம் வடமொழித் தாதுவடியய்கப் பிறந்த வினைமுற்று.

உரை:2

காயாம்பூ, கருநெய்தல், செங்கழுநீர் போன்ற மலர்களையெல்லாம் பார்க்கும்போது இந்தப் பாவி மனசு அப்படியே பூரித்துப் போகிறது. அவைகள் எல்லாம் திருமாலின் வடிவங்களே!

English Translation

Whenever I see the Puvai flower, the Kaya flower, the blue lotus, and the red lotus, my frail lowly heart rejoices sayins, "Aho, these are all the Lord's hues!"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்