விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடியால்*  படிகடந்த முத்தோ,*  அதுஅன்றேல்- 
    முடியால்*  விசும்புஅளந்த முத்தோ,*  -நெடியாய்!-
    செறிகழல்கொள் தாள்நிமிர்த்துச்*  சென்று உலகம்எல்லாம்,* 
    அறிகிலமால் நீஅளந்த அன்று.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடியாய் - பகவானே!
செறி கழல் கொள் தான் நிமிர்த்து - செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று - கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரிஸிக்கிரமாவதாரத்திலே
அடியால் படி  சடந்த முத்தோ - திருவடியால் பூமி முழுவதையும் அளந்துகொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அது அன்றேல் - அல்லது

விளக்க உரை

முடியால்லிசும்பளந்தமுத்தோ” = இவ்விடத்தில் ஒரு சங்கை உதிக்கக்கூடும்; “ஒரு குறளாயிருநில மூவடி மண்வேண்டி உலகனைத்து மீரடியாலொடுக்கி” (பெரிய திருமொழி 3-4-1) என்று திருமங்கையாழ்வாரும், “மாமுதலடிப்போதொன்று கவிழ்த்தலர்த்தி மண் முழுதுமகப்படுத்து, ஒண்சுடரடிப்போதொன்று விண்செவீ இ” (திருவாசிரியம் 5) என்று இவர்தாமும் அருளிச்செய்தபடி மேலே நீட்டப்பட்ட ஒரு திருவடியே மேலுலகங்களையெல்லாம் அளந்ததாயிருக்க, முடியாமல் விசும்பளந்த என்று இங்கே இவர் அருளிச்செய்வானேன்? என்று. (இதற்கு ஸமாதாநம்:-) ஒரு திருவடியே மேலுலகங்களையும் அளந்ததென்பது உண்மையே; அந்தத் திருவடியோடு கூடத்திருமுடியும் ஓங்கி வளர்ந்தபடியாலும், எல்லாச்செயலையும் திருவடிக்கே சொன்னால் கண்ணெச்சிலாகுமென்று ஒரு செயலைத் திருவடியிலேறிட்டுச் சொல்லுவோமென்று ஆழ்வார் திருவுள்ளம்பற்றினபடியாலும் முடியால்லிசும்பளந்த என்றவிதில் அநுபபத்தி ஒன்றுமில்லை யென்றுணர்க. முத்து என்பதற்கு அழகு என்கிற பொருளும் கொள்ள இடமுண்டாகையால் அப்பொருள்கொண்டு, எம்பெருமானே! நீ அடியால் பூமியையெல்லாம் அளந்தது அழகிய தா? அன்றி முடியாமல் மேலுலகங்களையெல்லாம் அளந்தது அழகியதோ? இரண்டு காரியங்களில் எது அழகியது? சொல்லாய் என்று கேட்கிறாரென்றுரைக்கவுமாம். இரண்டும் அழகியதே என்று வெளியிடுவதே இக்கேள்வியின் கருத்தாரும். அளந்த என்றது அனந்தது என்றபடி. இப்பொருளில், உலகளந்தபடியைப் பரமபோக்யாமக அநுபவிக்கிறார் என்று அவதாரிகை ஆகக்கடவது. இனி, முத்து என்பதற்கு நவரத்னங்களிற் சேர்ந்து முத்துக்கள் என்றே பொருள்கொண்டு உரைப்பதும் ஒரு புடையுண்டு. திருவடியிலணிந்த வீரக்கழலி“ சாத்தியுள்ள முத்துக்களே பூமியை அளந்துவிட்டனவோ? திருமுடியில் சாத்தியுள்ள முத்துக்களே விசும்பை அளந்து விட்டனவோ? என்கை. இப்பொருளில், கடந்த என்பதும் அளந்த என்பதும் ஈறுகெட்ட வினைமுற்றுக்கள். முத்தோ அடியால்படி கடந்தன, முத்தோ முடியால் விசும்பளந்தன? என்றபடி. உலகளந்த காலத்தில் திருவடியும் திருமுடியும் முத்துமயமாயிருந்தபடியால் அவயவங்கள் கண்ணுக்குத் தோன்றாமல் முத்துக்களே தோற்றின என்பதை வெளியிடுதல் இக்கேள்விக்குக் கருத்தாகும்.

English Translation

Is it the joy of striding the Earth with your feet?, or is if the joy of measuring the sky with your crown?, - I do not know. O Ancient Lord! Aho, the wonder in your face when you stretched your jewelled feet and measured the Universe!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்