விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தானே தனித்தோன்றல்*  தன்அளப்பு ஒன்றுஇல்லாதான்* 
    தானே பிறர்கட்கும் தன்தோன்றல்,*-தானே-
    இளைக்கில்பார் கீழ்மேல்ஆம்*  மீண்டுஅமைப்பான் ஆனால்,* 
    அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இளைக்கில் - (ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார் - இவ்வுலகமானது
கீழ்மேல் ஆம் - தலைகீழாக விபரீதமாய்வீடும்;
பிறர் தானே கட்கும் தற்றேன்றல் - அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
(தானே) - இப்படிப்பட்ட எம்பெருமான்றானே

விளக்க உரை

உரை:1

“தாய் தந்தை யெவ்வுயிர்க்குத் தான்” என்றார் கீழ்ப்பாட்டில். அப்படி சொல்லிவிடலாமோ? மற்றும் பல தேவதைகளும் ரக்ஷகராயிருக்கலாமேயென்று நெஞ்சு நினைக்க, அதைக் கண்டித்து, எம்பெருமானை ரக்ஷகன் என்பதை நன்கு நிலைநாட்டிப் பேசுகிறாரிதில். தானே தனித்தோன்றல் என்பதற்குப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம்; தோன்றல் என்று ஆண்மகனையும் அரசனையும் பெருமையிற் சிறந்தவனையும் சொல்லும்; அவ்வெம்பெருமானொருவனை புருஷோத்தமன்; அவனே உலகங்கட்கெல்லாம் இறைவன்; அவனே பெருமையிற் சிறந்தவன். இனி, தோன்றல் என்று வெளிப்படுதலுக்கும் பேராகையாலே, அவன் மற்றவர்களைப்போலே சருமங்களால் பிற்பவனல்லன்; தன்னருளால் தானே தோன்றுதலையுடையவன் என்று முரைக்கலாம். ***= அஜாயமாநோ பஹுநா விஜாயதே; தஸ்ய தீரா பரிஜாநந்தியோநிம்” என்று வேதம் கூறும். இதன் பொருள்:- எம்பெருமான் பிறப்பு இல்லாதவனாயினும் பல பிறவிகள் பிறக்கிறான்; அப்படி அவன் பிறப்பதற்குக்காரணம் இன்னதென்பதை ஞானிகள் அறிவர் என்பதாம். இனி, தானே தனிந்தோன்றல் என்பதற்கு எம்பெருமான் தன்னுடைய விருப்பமிருந்தால் மாத்திரம் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பவனே யொழிய, வேறொரு காரணங் கொண்டு ஸேவைஸாதிப்பவனல்லன் என்பதாகவுங் கருத்துரைக்கலாம். தன் அளப்பு ஒன்றில்லாததான் = தனக்கு வேறொருவரையும் ஒப்பாக உடைத்தாகாதவன். “ஒருவரையொருவர் நின்னொரப்பாரொப்பிலாவென்னப்பா வென்கின்றளால்” (பெரிய திருமொழி, 8-1-2) என்றது காண்க. உலகமுழுவதும் இவனாலே படைக்கப்பட்டு இவனாலே காக்கப்பட்டு இவனாலே அழிக்கப்படுதலால், இவனோடு உபமானமாகப் போருவதற்கு யாருளர்? தானே பிறர்கட்கும் தற்றோன்றல் = எந்த வஸ்துவிலும் *வன் அநுப்ரவேசித்திருப்பவன்; அவனில்லாமல் ஒரு துரும்பும் எழுந்தாடாதாகையால் எல்லாப் பொருட்கட்கும் தான் அந்தர்யாமியாயிருந்து அவற்றின் ஸத்தையை நோக்குமவன் என்கை. கருதரிய யுயிர்க்குயிராய்க் கரந்தெங்கம் பரந்துறையுமொரு தனி நாயகம்” (திருவரங்கக கலம்பகம், 1) என்றபடி.

உரை:2

யாராலும் பிறப்பிக்கப் படாமல் தானே தோன்றியவன் தனக்கு ஒப்பில்லாதவன், அவன்தான். உலகின்பிற பொருள்களிலும் இருப்பவன். அவன் தன்னுடைய காத்தல் தொழிலில் கொஞ்சம் அயர்ந்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிடும். அதை அவனே மீண்டும் அமைப்பான். அவனை யாரால் அளவிட்டுச் சொல்ல முடியும்?

English Translation

The Lord is self-made, without a peer or superior. Even his qualities that others ocquire are by his grace. When he wills it, the world goes awry. but he sets it right too. Now who can measure his glory?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்