விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்*  தன் திருமேனிநின்று ஒளி திகழ* 
    நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 
    கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்*  குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து* ஆயரோடு- 
    ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சால பல்நிரை பின்னே - பற்பல பசுத்திரளின் பின்னே;
தழை - பீலிக்குடைகளாகிற;
காலின் கீழ் - சோலையின் கீழே;
தன் - தன்னுடைய;
திருமேனி - திருமேனியானது;

விளக்க உரை

கண்ணபிரானுடைய வடிவழகில் ஈடுபட்டுச் சைதந்யத்தை யிழந்து தம்பகம் போலத் திகைத்துநிற்பாளொரு ஆய்ப்பெண்ணின் தாய் சொல்லும் பாசுரம் இது. “சால உறு தவ நனி கூர் கழி மகில்” என்ற நன்னூலின்படி மிகுதியைச் சொல்லக்கடவதான ‘சால’ என்ற உரிச்சொல்லோõடணைந்த ‘பல்’ என்ற சொல், பசுக் கூட்டங்களின் எண்ணிறவைக் காட்டுமென்க. (கோலச்செந்தாமரை யித்யாதி.) “இத்தால், திருத்தோழன்மாருடைய திரளை இடம் வலங் கொண்டு பார்த்து மகிழ்ந்து கொண்டுவரும்படி சொல்லுகிறது” என்ற ஜீயருரையைக் காண்க. “என் மகள் அயர்க்கின்றாள்” என்ன வேண்டியிருக்க, “அயர்க்கின்றது” என்று அஃறிணையாகக் கூறியது வழுவமைதியின் பாற்படுமென்க; அன்றி, அயர்க்கின்றதே - திகைத்து நிற்கிறபடி என்னே! என்று முரைக்கலாம்.

English Translation

Behind a huge herd of cattle, in the midst of a parasols, his face brightly lit, his long dark curls adorned with a peacock feather, his beautiful lotus eyes sparkling, he plays his flute singing songs, and dances with his friends. Seeing such a beautiful lad, my daughter has swooned.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்