விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீஅன்றே ஆழ்துயரில்*  வீழ்விப்பான் நின்றுஉழன்றாய்?*
    போய்ஒன்று சொல்லிஎன்? போநெஞ்சே,* -நீஎன்றும்-
    காழ்த்து உபதேசம் தரினும்*  கைக்கொள்ளாய்,* கண்ணன் தாள்- 
    வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே - ஓ மனமே!
ஆழ் துயரில் - அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான் - என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே - இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ
வழக்கு - நியாயம்

விளக்க உரை

நெஞ்சானது ஆழ்வாரை அடிபணிந்து விநயமுடன் நின்று ‘ஸ்வாமிந்! அடியேன்மீது தேவரீர்க்குச் சீற்றம் வேண்டா; அடியேன் தேவரீர்க்கு நிதேயனான சேஷபூதன்; ஆன பின்பு அடியேன் தேவரீர்க்கு உகப்பாக எப்படி நடந்து கொள்ள வேணுமோ அப்படி உததேசித்தருளீர்; அதன்படியே நடந்து கொள்கிறேன்’ என்ன; அதற்கு ஆழ்வார். “உபதேசம் தரிநம் நீ என்றும் காழ்த்துக் கைக்கொள்ளாய்= நெயஞபுசே! என் உபதேசத்தை நீ லக்ஷியம் பண்ணுகிறாயோ? இதுவரை உனக்கு எத்தனையோ உத்தேசங்கள் செய்தாயிற்று. ஒன்றையும் நீ கைக் கொண்டாயில்லை; நீர் என்ன எனக்கு உபதேசிக்கிறது?’ என்று சீறி உதறித்தள்ளிவிடுகிறாய்” என்று சொல்ல; அதற்கு நெஞ்சானது ‘ஸ்வாமி! இதுவரை அடியேன் ஒருநாளும் இப்படி அபசாரப்பட்டதில்லை; பட்டிருந்தாலும் க்ஷமிக்கவேணும்; இப்போது அடியேனுக்குக் கர்த்தவ்யத்தை ஸ்பஷ்டமாக உபதேசித்தருளீர்’ என்று வேண்ட, அதற்கு உதபேசிக்கிறார் கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு என்று. நானம் ஒரு நாளும் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகலப் பார்க்கலாகாது; எம்பெருமான் நம்மையே தேடித் திரிவானாயிருக்க. நாம் விமுகராய்ப் பின்வாங்கலாமோ? அவன் திருவடிகளை வாழ்த்துவதே நமக்கு ப்ராப்பதம்காண் என்றாயிற்று.

English Translation

O Heart! Have you not cast me into deep despair by your actions? What use dilating on this? Go, you were never the one to heed even my best advice. Know that praising Krishna is the only good.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்