விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெறிகாட்டி நீக்குதியோ,*  நின்பால் கருமா- 
    முறிமேனி காட்டுதியோ,*  மேல்நாள் அறியோமை*
    என்செய்வான் எண்ணினாய் கண்ணனே,*  ஈதுஉரையாய்- 
    என்செய்தால் என்படோம் யாம்?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறியோமை - அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய் - என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய் - தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
என் செய்தால் - நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம் - யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.

விளக்க உரை

‘நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ்வாழ்வாரை நாம் உபாயமாகப் பொருந்தவிட்டுக் கொண்டோம்; இனி இவர் நம்மை நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்; அப்படியே யிருக்கட்டும்; அல்லும் பகலும் அழுது கதறிக் கொண்டிருக்கட்டும்; நம்மைக் கிட்டி அநுபவிக்க விரும்பினாராகில் கருமம் ஞானம் முதலிய ஸாதநங்களை அனுட்டித்து மெதுவாக வந்து சேரட்டும்’ என்ற எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருப்பதாகத் தெரிந்துகொண்ட ஆழ்வார் அப்பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார்; - பெருமானே! உனக்கு ஸ்வாதந்திரியம் என்கிற ஒரு குணமும்-, நிர்ஹேதுகக்ருபை என்கிற ஒரு குணமும் உண்டு; எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும் செய்யக்கூடும். சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக் கைவிடப் பார்ப்பாய்; சிலரிடத்தில் நிர்ஹேதுக கருணையைச் செலுத்தி வலிகட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய். இப்படி எத்தனையோ செய்துமிருக்கிறாய். இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத் திருவுள்ளம் பற்றியிருப்பது எது? ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப்பார்க்கிறாயோ? அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ? எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களேயன்றி உன்னை நியமிக்கவல்லார் ஆருமில்லை; ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதிவாய்திறந்து சொல்லிவிட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார். நெறிகாட்டி நீக்குதியோ நின்பால்? =நெறியென்றால் வழி; வழியாவது உபாயம்; பகவத் கீதையில் சரமச்லோகத்துக்குக் கீழே விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ள கர்மஜ்ஞாநாதி ஸாதநாந்தரங்களை இங்கு நெறி யென்கிறது. எம்பெருமான் யாரை அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றுகிறானோ அவர்களை நோக்கி “நீங்கள் எவ்விதமான அலைச்சலும் படவேண்டா; என்னையே தஞ்சமாக உறுதி கொண்டு மார்விலே கைவைத்து உறங்குங்கள்” என்பன்; எவர்களைக் கைவிட நினைக்கிறானோ அவர்களுக்கு அருந்தொழில்களை அளவில்லாதபடி விதித்து ‘இவற்றைச் சரியாகச் செய்து பேறு பெறுங்கள்’ என்பன். ஆகையாலே நெறிகாட்டுகை யென்பதும் நீக்குகை யென்பதும் பர்யாயம். நெறியைக் காட்டுகையாவது - ‘இது கார்மயோம், இது ஜ்ஞாநயோகம். இது பக்தி யோகம்; இவற்றுள் எது உமக்கு ஸாத்யமோ அதனை அநுஷ்டிக்கக் கடவீர்’ என்றுசொல்லி, தான் உதாவஸீகனாய் விடுகை. நெறிகாட்டி நின்பால் நீக்குதியோ? = உன்னையொழிய றேறொருபாயத்தைக் காட்டி உன்பக்கலில் நின்றும் என்னை அகற்றப் பார்க்கிறாயோ என்றவாறு.

English Translation

O Krishna! Will you only show us the way to your feet and disappear? Or will you show us your dark radiant frame as well? We do not know what lies ahead. Pray tell us what you intend. Whatever you do will surely affect us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்