விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓஓ! உலகினது இயல்வே*  ஈன்றோள் இருக்க*
    மணை நீராட்டி,*  படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து-
    அளந்து,*  தேஎர்ந்து உலகு அளிக்கும் முதல்பெருங்- 
    கடவுள் நிற்ப*  புடைப் பல தான் அறி- 
    தெய்வம் பேணுதல்,*  தனாது-
    புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி,* 
    கொல்வன முதலா அல்லன முயலும்,* 
    இனைய செய்கை இன்பு துன்பு அளி* 
    தொல் மா மாயப் பிறவியுள் நீங்காப்* 
    பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படைத்து - ஸ்ருஷ்டித்தும்
இடந்து - ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும்
உண்டு - (மற்றொருகால் பிரளயம் வந்தபோது) வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து - பிறகு வெளிப்படுத்தியும்
அளந்து - (பின்னுமொருகால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக்கொண்டும்

விளக்க உரை

“முடிதோளாயிரந்தழைத்த நெடியோய்க்கல்லது மடியதோவுலகே“ என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த ஆழ்வார் தம்முடைய கொள்கைப்படியே உலகமனைத்தும் எம்பெருமானை வணங்கி வழிபட்டு உஜ்ஜீவிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தார். க்ஷுத்ரபலன்களை விரும்பி க்ஷுத்ரதேவதைகளை ஆராதிக்கின்ற க்ஷுத்ர ஜனங்களே மிகுதியாகக் காணப்பட்டன. பரிதாபம் பொறுக்கமாட்டாமல் ஐயோ! ஐயோ! இப்படியும் உலகம் பாழாய்ப்போவதே! என்று வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொள்ளுகிறார் – ஓ ஓ என்று கதறுகிறார். இப்படி இவர் ஓ ஓ என்று கதறுகிற கதறல் எவ்வளவு தூரம் கேட்குமென்னில், இவர்தாம் கீழ்ப்பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவு தூரம் கேட்குமென்னில், இவர்தாம் கீழ்ப்பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவுதூரம் சென்றதோ, அவ்வளவிலும் மேலாகவே சென்று ஒலிக்குமென்று கொள்ளீர். இவ்வுலகின் ஸ்வபாவத்தை நாம் என்ன சொல்லுவோம்! இவ்வுலகம் செய்கிற காரியம் என்னவென்றால், நன்றிகெட்ட காரியஞ்செய்யாநின்றது. பிள்ளையைப் பெறுவதற்கு முன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்றபின்பும் குறையற ஸம்ரக்ஷிப்பதற்காக எத்தனையோ வருத்தங்கள் கஷ்டங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்யவேண்டியது ப்ராப்தமாயிருக்க, அவளைத் திரஸ்கரித்துவிட்டு உபயோகமற்றவொரு மணைக்கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வரைப்போலே இவ்வுலகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்துவிட்டு ஒரு நன்றியும் செய்யமாட்டாத அசேதநப்ராயங்களான புதுத்தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே! இது விவேகமிருந்து செய்கிற காரியமோ? அறிவு உள்ளவர்கள் இப்படியுஞ் செய்வார்களோ? எம்பெருமான் இவ்வுலகுக்குச் செய்த உபகாரங்களை இன்று நான் புதிதாகச் சொல்லவேண்டுமோ?

English Translation

Alas, alas, the ways of the world! Leaving out the mother cow they bathe the newborn calfi Leaving aside the First-cause Lord who made, lifted, swallowed, remade, and measured the Universe, thus protecting it at all times, they pick-up some unknown wayside godling for worship, and only display their small minds and big egos, ending in cruelty and wicked acts that give sweet pain, driving the trembling nervous soul further into depths of Karmic hell!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்