விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீலத் தட வரைமேல்*  புண்டரீக நெடுந் தடங்கள்-
    போலப்,*  பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்,*  பொங்கு முந்நீர்-
    ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்* 
    கோலம் கரிய பிரான்,*  எம் பிரான் கண்ணின் கோலங்களே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீலம் - நீலமணிமயமான
தடைவரை மேல் - பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல்போல பொலிந்து - பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும் - எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவையுமாயுள்ளவை

விளக்க உரை

நாயகனுடைய உருவெளிப்பாடு கண்ட நாயகி தோழிக்குக் கூறுதல் இது. ஒரு பொருளினிடத்து இடைவிடாது கருத்தைச் செலுத்த அந்தப் பாவனையின் ஊற்றத்தால் அப்பொருள் கண்ணுக் கெதிரில் தோன்றியது போலக் காணப்படுதல் இயல்பு. அதில் கண்ணழகில் ஆழ்ந்து கூறியது ,இது. கடல் சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும் விண்ணுலகுக்குத் தலைவனும் மற்றுமுள்ள நல்லவர் யாவர்க்குந் தலைவனும் கரிய திருமேனியனுமான எம்பெருமானது திருக்கண்களின் அழகுளே எமக்குக் காணுமிடந்தோறுந் தோன்றுகின்றவையாயுள்ளன; அவை எங்ஙனே விளங்குகின்றன வென்னில், நீலர்ன மயமானதொரு பெரிய மலையின் மேலுள்ள பெரிய செந்தாமரை மலர்த் தடாகங்கள் போல விளங்காநின்றன.

English Translation

My Lord is the dark-hued lord, the lord of the ocean-girdled Earth, the lord of the sky and the lord of all the good folk. His beautiful eyes resemble a thicket of lotuses in a gem pool on a dark mountain. They appear before me everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்