விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சில்மொழி நோயோ*  கழி பெருந் தெய்வம்,*  இந் நோய் இனது என்று-
    இல் மொழி கேட்கும்*  இளந் தெய்வம் அன்று இது*  வேல! நில் நீ- 
    என் மொழி கேள்மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான்
    சொல் மொழி, மாலை*  அம் தண்ணம் துழாய்கொண்டு சூட்டுமினே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சில் மொழி நோயோ - சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது - இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
வேல - வெறியாட்டாளனே!
நீ நில் - நீ விலகி நிற்பாயாக;

விளக்க உரை

இப்பாட்டுக்குத் துறை வெறிவிலக்கு. ரஹஸ்யமாக் நாயகியைப் புணர்ந்த நாயகன் பின்பு அவளைப் பிரகாசாமகவே விவாஹம் செய்து கொள்ளும் பொருட்டுப் பொருள்திரட்டி வருவதற்காக அவளைப் பிரிந்து சென்று வரவு குறித்த காலத்தில் வாராது விளம்பிக்க. அந்நிலையிற் பிரிவாற்றாது மிக வருந்திய நாயகியைச் செவிலித்தாய்மார் எதிர்ப்பட்டு அவளது வடிவு வேறுபாட்டை நோக்கி ‘இவள் இங்ஙனம் மெலிதற்குக் காரணம் என்னே?’ என்று கவலைப்பட்டுக் * கட்டுவிச்சியைக் குறிகேட்க, அவளும் தன் மரபின்படி ஆராய்ந்து ‘இவளுக்கு முருகக் கடவுள் ஆவேசசி தொத்த தொழியப் பிறிதொன்றுமில்லை’ என்று சொல்ல, அதுகேட்ட செவிலித்தாயர் உடனே வெறியாட்டாளனை அழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசமாடுவிக்க முயல, அதற்கு நாயகி மிக வருந்தாநிற்க, அச்சமயத்தில் அவளது துன்பத்தின் உண்மைக் காரணமுணர்ந்த தோழி வேலனையும் செவிலியரையும் நோக்கிச் சிலகூறி வெறிவிலக்குவதாமிது.

English Translation

Hait, spear-dancer! Listern to me. Ladies! This laconic girl's sickness is caused by a very big god; it is not a sickness caused by a small godling that responds to this spear-dancer. Recite the names of the lord who swallowed the seven worlds, and swathe her coiffure with a Tulasi wreath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்