விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பலபல ஊழிகள் ஆயிடும்,*  அன்றி ஓர் நாழிகையைப்*
    பலபல கூறிட்ட கூறு ஆயிடும்,*  கண்ணன் விண் அனையாய்!* 
    பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்* 
    பலபல சூழல் உடைத்து,*  அம்ம! வாழி இப் பாய் இருளே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணன் விண் அணையாய் - எம்பெருமானுடைய பரமபதம்போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம் - (நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி - அதுவல்லாமல்

விளக்க உரை

நாயகனோடு கூடியிருந்து பிறகு விதிவசந்தாற் பிரிந்த நாயகி அப்பிரிவை ஆற்ற மாட்டாதாளாய், நாயகனில்லாமல் இராப்பொழுதைக் கழிக்க முடியாதிருக்கிறபடியைத் தோழிக்குச் சொல்லுகிறாள். ஒருநாளும் விச்லேஷமில்லாத ஸம்ச்லேஷத்திலே தனக்கு ஆவலுள்ளமையை இதனால் வெளியிடுகிறபடி. இங்ஙனன்றியே, ஸம்ச்லேஷம் நடந்த பின்பு நாயகியை நோக்கித் தோழியானவள் அக் கலவிநிகழ்ச்சியின் தன்மைபற்றிக் கேட்க, பிரிந்திருக்கும்போது காலம் நெடுகுவதுபோல, கூடியிருக்கும்போது காலம் குறுகும்படி என்னே!” என்று கலவிநிலையிற் காலங்கழிவது தெரியாது கழிந்த இன்பச் சிறப்பைக் கூறினாள் நாயகி என்றுங் கொள்ளலாம்.

English Translation

O Friend, sweet as krishna's sky abode! This pervading darkness can stretch for many, many aeons, or can shrink to an infinitesimal fraction of a moment, whether our heart's lover joins us of leaves us, both ways we stand to suffer. Alas, this darkness is full of viles! May it live.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்