விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஈர்வன வேலும் அம் சேலும்,*  உயிர்மேல் மிளிர்ந்து இவையோ*
    பேர்வனவோ அல்ல*  தெய்வ நல் வேள் கணைப்,*  பேர் ஒளியே-
    சோர்வன நீலச் சுடர் விடு மேனி அம்மான்*  விசும்பு ஊர்-
    தேர்வன,*  தெய்வம் அன்னீர கண்ணோ? இச் செழுங் கயலே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈர்வனவேலும் - (பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும் - அழகிய சேல்மீன்கள்போலவும் உள்ளனவான
உயிர்மேல் மிளிர்ந்து - (எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல - (அதைவிட்டு) நீங்குவன அல்ல;

விளக்க உரை

நாயகன் நாயகியினது நன்மையைக் கொண்டாடிக் கூறுதலாகி ‘நலம்பாராட்டு’ என்பது இப்பாட்டுக்குத் துறையென்றறிக. நாயகனாவன் நாயகியோடே புணர்ந்து பிரிகிற மையத்திலே மூன்று காரணங்களினால் நாயகியின் அழகைக்கொண்டாடுவது வழக்கம்; உண்மையில் அவளழகில் தான் ஈடுபட்டிருப்பது முதற் காரணம்; பிரிந்த காலத்தில் இக் கொண்டாட்டம் தன்னுடைய தரிப்புக்கு உறுப்பாயிருக்குமென்பது இரண்டாவது காரணம்; ‘இவர் நம்மைப் பிரிந்து நெடும்போது உயிர் தரிக்கமாட்டார்; கடுக வந்திடுவர்’ என்று நாயகி தெரிந்துகொண்டு ஆறியிருக்க வேணுமென்பது மூன்றாங்காரணம். நாயகியின் கண்ணழகி லீடுபட்டுப் பேசும் பாசுரமிது. கூர்மையான நுனியாலே எதிரிகளை பழிக்கும் வேல்போலக் கூர்மையான நோக்கத்தால் என்னை வருத்துகின்றன இக் கண்கள் என்பது தோன்ற ‘ஈர்வனவேலும்’ எனப்பட்டது. மீன்போல மடப்பமும் பிறழ்ச்சியுங்கொண்டுள்ளன என்பது தோன்ற ‘அம் சேலும்’ எனப்படட்து. ‘வேல்போலவும் என்ன வேண்டியது உவமைவுருபு தொக்கியிருக்கின்றதென்க. இலக்குத்தப்பாது மர்மத்திலே பட்டுவிடாமல் தைத்து உயிரைக்கவரும் அம்புபோல இவையும் உயிர்நிலையிலே பட்டு அதனைக் கவராமல் விடுவதில்லை யென்பது தோன்ற ‘உயிர்மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோவல்ல’ எனப்பட்டது. அநித்தியமாய் நாசமடையுந் தன்மையதனா உடம்பை அழியச் செய்வதுமாத்திரமேயல்லாமல் நித்யமாய் அழியாத்தன்மையதான உயிரையும் அழியச்செய்யத் தொடங்கினமையும் தோன்றும். பேர்வனவோ அல்ல- பறிக்கக்கூடியனவாக இல்லை என்றபடி.

English Translation

Are these soul-piercing spears, or beautiful fish? Or are these unfired darts of Madana's bow? These eyes are indeed divine fish searching for the water-hued radiant lord in his Vaikunta abode!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்